Pages

Sunday 4 December 2011

My Third Financial Planning Article in Naanayam Vikatan on 4th December 2011

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை

மதுரையில் உள்ள அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆறுமுகத்தின் மாதச் சம்பளம் 25,000 ரூபாய். பிடித்தம் போக கைக்கு 12,600 ரூபாய் கிடைக்கிறது. மனைவி கோமதி, வீட்டு நிர்வாகத்தைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டு, மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மாதச் சம்பளம் 29,500 ரூபாய். பிடித்தம் போக கிடைப்பது 15,500 ரூபாய். ஆக, குடும்பத்தின் மொத்த வருமானம் 28,100 ரூபாய்.
றுமுகம் - கோமதி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் கிருஷ்ணப்ரியா, தனியார் கல்லூரியில் டிப்ளமோ கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இளைய மகன் கார்த்திக் சங்கர், ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
''சொத்து என்று பார்த்தால், மதுரையில் இருக்கும் சொந்த வீடு (மதிப்பு 60 லட்சம் ரூபாய்). மனைவியிடம் இருக்கும் கையிருப்பு தங்கம் 35 சவரன் மற்றும் அவசரத் தேவைக்காக கையிருப்பு ரொக்கம் 10,000 ரூபாய் இருக்கிறது. எட்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறேன்.  இதுக்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டுகிறேன்.
வீடு வாங்குவதற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி யிருக்கிறேன். அதற்காக 7,800 இ.எம்.ஐ. கட்டி வருகிறேன்.
5.20 லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது. எப்படியாவது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் கடனை அடைத்து விட வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் யோசனை சொல்ல வேண்டும்'' என்றவரின் குடும்ப நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து விட்டு, அவருக்கான நிதி ஆலோசனைகளைச் சொன்னார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து சம்பாதிக்குற 28,100 ரூபாய் சம்பாத்தியத்துல மொத்தம் 26,200 ரூபாய் செலவாயிடுது. எதிர்காலச் சேமிப்புக்குன்னு பாக்குறப்ப 1,900 ரூபாய்தான் மிச்சமிருக்கு. இந்தத் தொகையை மட்டும் வச்சிகிட்டு எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. எனவே, இ.எம்.ஐ., இன்ஷூரன்ஸ் போன்றவற்றில் போடப்படும் பணத்தைக் கொஞ்சம் குறைப்பதன் மூலம் எதிர்காலத் திட்டமிடலுக்குத் தேவையான பணத்தை முதலில் உருவாக்கணும்.  
இதுவரைக்கும் வீட்டுக் கடனுக்காக ஒவ்வொரு மாதமும் 7,800 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வந்திருக்கார் ஆறுமுகம்.  சமீபத்துல 2.25 லட்சம் ரூபாய் கட்டி, வீட்டுக் கடனை கணிசமாக குறைக்கவும் செஞ்சிருக்கார். ஆக, இனிமேல் இவர் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. 5,300 ரூபாய்தான். இதன் மூலம் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும்.
கணவன் - மனைவி ரெண்டு பேருக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஏற்கெனவே பிடிக்கப்படும் பி.எஃப். பணத்தோடு கூடுதலாக பணத்தைப் பிடிக்கச் சொல்லி இருப்பதால், 12,000 ரூபாய் பி.எஃப்.க்கு போய்விடுகிறது. இந்தத் தொகையை பாதியாக குறைச்சா, மாதாமாதம் மிச்சமாகிற 6,000 ரூபாயை  எதிர்கால முதலீட்டுக்கு பயன்படுத்திக்கலாம்.
ஆறுமுகம் தன் பேரிலும் மனைவி குழந்தைங்க பேரிலும் எக்கச்சக்கமா இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வச்சிருக்காரு. இந்த பாலிசியில எல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசி இன்னும் ஒன்றரை வருஷத்துல முடிஞ்சிடும் என்கிறதால, அந்த பிரீமியத் தொகையை முதலீட்டுக்காகப் பயன்படுத்திக்கலாம். இதுபோக, குடும்பச் செலவுகளை குறைத்தால் மாதம் 2,000 ரூபாய் வரைக்கும் மிச்சப்படுத்த முடியும். இப்படி எல்லாம் மிச்சமாகும் பணத்தை வைத்து எதிர்காலத் தேவைகளை பூர்த்தி  செய்யலாம்'' என்றவர், அதற்கான திட்டங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.
லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
''ஆறுமுகம் தன் பேரில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு 20 வருஷம் பிரீமியம் கட்டுற மாதிரி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வச்சிருக்கார். டேர்ம் இன்ஷூரன்ஸ் இவரோட ஓய்வு காலம் வரைக்கும் இருந்தாலே போதும். அதனால, இந்த டேர்ம் பிளானை ரத்து செஞ்சுட்டு, 15 வருடம் பிரீமியம் கட்டுகிற மாதிரி 20 லட்ச ரூபாய்க்கு வேறு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. இந்த பாலிசிக்கு வருட பிரீமியம் 11,000 ரூபாய் கட்டணும். இதேமாதிரி, ஆறுமுகம் மனைவி பேருலையும் 15 வருஷம் பிரீமியம் கட்டுகிற மாதிரி 20 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கணும். இதுக்கு வருடம் 7,000 ரூபாய் பிரீமியம் கட்டணும்.  
இதுபோக, குடும்ப உறுப்பினர் கள் எல்லோருக்கும் சேர்த்து மூணு லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி (மருத்துவ காப்பீடு) எடுத்துக்கணும். இதுக்கு வருடம் 14,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். ஏற்கெனவே அலுவலகத்துல குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ செலவு அனுமதிக்கப்படுவதால் மூன்று லட்சம் ஃப்ளோட்டர் பாலிசி போதுமானது.
குழந்தைகளின் கல்விக்கு!
இன்னும் ரெண்டு வருஷத்துல கிருஷ்ணப்ரியாவை பி.எட். படிக்க வைக்க இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்றாரு ஆறுமுகம். குறுகிய காலத் தேவைங்கறதால மாதம் அதிகமா முதலீடு செஞ்சாதான் தேவையான பணத்தை ஈட்ட முடியும். இன்னைல இருந்து மாதம் 7,000 ரூபாயை 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஆர்.டி.யில்  24 மாதங்கள் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதலீடு முதிர்வின்போது 1.82 லட்ச ரூபாய் கிடைக்கும். இதுபோக மீதி தேவைப்படும் பதினாறு ஆயிரம் ரூபாய்க்கு பி.எஃப். பணத்திலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  
கார்த்திக் சங்கரை பி.இ. படிக்க வைக்க இன்னும் ஏழு வருஷம் கழிச்சு அஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்படுங்கறாரு. இதுக்கு இன்னைல இருந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுல மாதம் 3,400 ரூபாயை ஏழு வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா, கல்விச் செலவுக்குத் தேவையான பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கு..!
குழந்தைகளின் திருமணத்திற்கு..!
கிருஷ்ணப்ரியாவின் திருமணத்திற்கு இன்னும் ஆறு வருஷம் கழிச்சு 20 லட்சம் ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்கிறார். ஆறு வருஷத்துல 20 லட்சம் ரூபாயை புரட்ட முடியுமான்னு கேட்டா, கொஞ்சம் கஷ்டப்பட்டா முடியும். இதற்கு  ஆறுமுகம் முதல்ல செய்ய வேண்டியது,  ஜீவன் முத்ரா மற்றும் எ.ல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசியைத் தவிர, மற்ற பாலிசிகளை  சரண்டர் செய்யணும். அப்படி  செய்தால், சரண்டர் வேல்யூ 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அந்த பணத்தை 6 வருஷத்துக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செஞ்சா 2.89 லட்சம் ரூபாய் கிடைக்கும். கிருஷ்ணப்ரியாவோட கல்விக்காகச் செஞ்சிட்டு வந்த 7,000 ரூபாய், இன்னும் இரு வருடத்தில் முடிந்துவிடும். அந்த தொகையை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் நாலு வருஷம் முதலீடு செஞ்சா 4.62 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த பணத்தையும், ஏற்கெனவே இவர் எடுத்து வச்சிருக்குற ஜீவன் முத்ரா பாலிசி  2017-ல் மெச்சூரிட்டி ஆகுறதால இதன் மூலம் கிடைக்கக்கூடிய
2.25 லட்சத்தையும் சேர்த்து 9.76 ரூபாயை திருமணச் செலவுக் காக பயன்படுத்திக்கலாம். இதுபோக தேவைப்படும் மீதி பணத்துக்கு கையிருப்பா இருக்குற தங்கத்தைப் பயன் படுத்தியும், பி.எஃப். மூலம் அஞ்சு லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கியும் திருமணத்தைச் செஞ்சு முடிச்சிடலாம்.
கார்த்திக் சங்கருக்கு 26 வயசுல திருமணம் செய்து வைக்கணும்னு ஆசைப்படுறாரு. இந்த நேரத்தில கார்த்திக் சங்கர் பி.இ. படிப்பை முடிச்சு நாலு வருஷம் ஆகியிருக்கும். இந்த இடைப்பட்ட வருஷத்துல வேலைக்குப் போயி சம்பாதிச்சு அந்த வருமானத்தையும் முதலீடு செஞ்சா கல்யாணச் செலவுக்குத் தேவையான ஏழு லட்சம் ரூபாயை கார்த்திக் சங்கரே சம்பாதிச்சுடலாம். இதுக்காக ஆறுமுகம் மனசை போட்டு உருட்டிக்காம இருக்குறது நல்லது.
ஓய்வு காலத்துக்கு..!
இன்றைய நிலவரப்படி தன்னோட ஓய்வு காலத்துக்கு 15,000 ரூபாய் வருமானம் இருந்தா போதும்னு சொல்றாரு. ஆனா, இன்னும் 12 வருஷம் கழிச்சு குறஞ்சது 50,000 ரூபாயாவது இருந்தாதான் இவரால இன்னைக்கு செய்யுற செலவுகள் மாதிரியே அன்னைக்கும் செஞ்சு சந்தோஷமா வாழ முடியும். இதுக்கு இன்னையில இருந்து 1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 12 ஆண்டுகள் முதலீடு செஞ்சா, 4.03 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
எல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசியை சரண்டர் செஞ்ச பிறகு கிடைக்கக்கூடிய பிரீமியத் தொகை 2,000 ரூபாயை ஓய்வு காலத்துக்காக மாதாமாதம் 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 5.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, பாலிசியை சரண்டர் செய்யும்போது 70,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த பணத்தை வேறெதுக்கும் பயன்படுத்திக்காம ஓய்வு காலத்துக்காக பேலன்ஸ்டு ஃபண்டுல முதலீடு செய்யணும். இந்த பணத்துக்கு 12% வருமானம் கிடைச்சா 10 ஆண்டுகள் கழிச்சு  2.17 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
கார்த்திக் சங்கரோட கல்விக்கான முதலீடு முடிஞ்சதும் 3,400 ரூபாயை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் 15% எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துட்டு வந்தால் 3.04 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதே மாதிரி கிருஷ்ணப்ரியாவோட கல்யாணத்துக்காக செய்துட்டு வந்த முதலீடு 7,000 ரூபாயை கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்ந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுல ஆறு ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா, முதலீடு முதிர்வின்போது 8.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த முதலீட்டு தொகை 23.35 லட்சம் ரூபாயை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதன் மூலம் ஆறுமுகத்தோட ஓய்வுகாலத்துல மாதா மாதம் 23,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இதுபோக, கணவன் - மனைவிக்கு அரசு வேலை என்பதால், இன்னும் 12 வருஷம் கழிச்சு கவர்மென்ட் பென்ஷன் மாதம் 30,000 ரூபாய் கிடைக்கும். தவிர, பி.எஃப். பணமும் கிடைக்கும். இந்த பணத்தை எல்லாம் வச்சுகிட்டு ஓய்வு காலத்துல சந்தோஷமா வாழலாம். வாழ்த்துகள்!

Sunday 30 October 2011

My Second Financial Planning Article in Naanayam Vikatan on 30th October 2011

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை

இன்னும் சில மாதங்களில் குழந்தைக்குத் தாயாகப் போகும் சந்தோஷத்துடனும், குடும்பத்தின் மீதுள்ள அக்கறையுடனும் நம்மிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார், சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் அனுராதா (வயது 31). எதிர்காலத்தில் தன் குடும்பத்தைச் சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் நிதி ஆலோசனை கேட்டு வந்த இந்தப் பெண் வாசகர் நிச்சயம் வரவேற்புக்குரியவர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரது மாதச் சம்பளம் 80,000 ரூபாய். கணவர் ராஜசேகரின் மாதச் சம்பளம் 41,000 ரூபாய். இதுதவிர, இன்னும் சில மாதங்களில் வீட்டு வாடகையின் மூலம் 4,000 ரூபாய் வருமானம் வரப் போகிறது.  
''மதுரையில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு; சென்னையில் வசித்துவரும் வீட்டின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். மதுரையில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 21 சென்ட் மனை; திருப்பூரில் 10 லட்சம் மதிப்புள்ள 17 சென்ட் நிலம் என சொத்துக்கள் இருந்தும் கடன்களும் அதிகம்''  என்றவர், கடன்களை சொன்னார்.
அனுராதாவின் பெயரில் 28 லட்சம், கணவர் ராஜசேகர் பெயரில் 13 லட்ச ரூபாய் என  மொத்தம் 41 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். ராஜசேகர் பெயரில் தனிப்பட்ட கடன் 2 லட்ச ரூபாயும், இருவரது  பெயரிலும் 10 லட்ச ரூபாய் நகைக் கடனும் இருக்கிறது.    
''முதலில் கடனை ஒழித்துக் கட்ட வேண்டும். குழந்தைக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கல்விச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
திருமணத்திற்கு 25 லட்ச ரூபாய் தேவை. 5 லட்ச ரூபாயில் கார் வாங்க வேண்டும்; ஓய்வு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் நிதி ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்றார்.
இந்தக் குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்த நிதி ஆலோசகர் பத்மநாபன் விரிவான ஆலோசனையைத் தந்தார்.
''நிறைய வருமானம் வர்றப்ப நிறைய கடன் வாங்கத் தோணும். அந்த சிக்கல்தான் அனுராதாவுக்கும். கவலைப் படாதீங்க, கொஞ்சம் கஷ்டப்பட்டா கடன் தொல்லையில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம்.  

கடன் அடைக்க..!
''ராஜசேகர் பேர்ல 13 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் இருக்கு. இதுக்காக மாதம் இ.எம்.ஐ. 13,000 ரூபாய் கட்டிட்டு வர்றாரு.
இந்தக் கடனை 2025-ம் ஆண்டு வரைக்கும் கட்டணும். அனுராதா தன் பேருல 28 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்காங்க. இதுக்காக மாதம் 38,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றாங்க. தொடர்ந்து 10 வருஷம் இ.எம்.ஐ. கட்டினால் தான்  கடன் முடியும். பத்து வருஷம் கட்ற வீட்டுக் கடனை 20 வருஷம் வரைக்கும் கட்டுற மாதிரி வச்சுக்கிட்டா, ஒவ்வொரு மாசமும் 28 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இப்படி மிச்சமாகிற 10,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த பத்து ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 2021-ல் 27.52 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த 27.52 லட்சத்தை 10 வருடங்களுக்கு 15% வருமானம் தருகிற  ஈக்விட்டி ஃபண்டில் போட வேண்டும். அதே சமயத்தில் வீட்டுக் கடன் தவணைக்கு 28,426 ரூபாயை மேலே போடப்பட்ட ஃபண்டிலிருந்து மாதாமாதம் எடுத்துக் கட்டி கடனை அடைத்து விடலாம். மீதி இருக்கிற வருமானம் அப்படியே தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2031-ல் கிடைக்கக்கூடிய தொகை 43 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்தப் பணத்தை எடுத்து, அடுத்த அஞ்சு வருஷம் 12% வருமானம் தரக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதாவது 2036-ல் கிடைக்கக்கூடிய தொகை 75.76 லட்சம் ரூபாய்.
இதன் மூலம் மாதம் 75,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இந்தப் பணத்தை  ஓய்வுக் காலத்துக்குப் பயன்படுத்திக்கலாம்.
இதுதவிர, 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடனும், தனிப்பட்ட கடன் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வச்சிருக்காங்க. தனிப்பட்ட கடனுக்காக மாதம் 6,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வாங்கி வச்சிருக்காங்க. இதுக்காக மாதம் 10,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. ஏற்கெனவே இருக்கிற மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர் செய்றதால 7,500 ரூபாய் பிரீமியத் தொகை மிச்ச மாகும். இதிலிருந்து புதுசாக  டேர்ம் பாலிசி தலா 1 கோடி ரூபாய்க்கு எடுத்து மாத பிரீமியம் 3,000 கட்ட வேண்டும். மீதி உள்ள 4,500 ரூபாயுடன் தற்போதைய சேமிப்பான 16,000 ரூபாயிலிருந்து முதலீட்டுக்காக ஒதுக்கியிருக்குற 9,500 போக, பாக்கி இருக்குற 6,500 ரூபாயையும் சேர்த்து 11,000 ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை நகைக் கடன் இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக்கலாம்.
இன்னும் ஒரு வருஷத்துல இந்த நகைக் கடனை அடைக்கணும்னு சொல்றாங்க அனுராதா. இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்றதால 1.80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்னும் மூணு மாசத்துல கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டு வச்சிருக்கிற 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இவை தவிர, கையிருப்பா ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இந்த வருஷம் கிடைக்குற போனஸ் பணம், கைக்கு வெளியே இருந்து கொஞ்சம் காசு வரணும்னு சொல்றாங்க. ஆக, எல்லாப் பணத்தையும் சேர்த்து அடுத்த ஒரு வருஷத்துல நகைக் கடனை நிச்சயமா அடைச்சுடலாம்.''

லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
''அனுராதா தன் பேர்லயும் தன் கணவர் ராஜசேகர் பேர்லயும் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிருக்காங்க. இதுக்காக வருஷம் 90,000 ரூபாய் பிரீமியம் கட்டி வர்றாங்க.  இவங்க கட்ற பிரீமியத் தொகைக்கு கிடைக்கக்கூடிய கவரேஜ் வெறும் ஏழு லட்சம் ரூபாய்தான். அதனால், இதில் ஒரு பாலிசியை சரண்டர் செய்தால், 75,000 சர்வைவல் பெனிஃபிட் மற்றும் 25,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்கும். இந்த ஒரு லட்சம் ரூபாயை கார் வாங்கறதுக்கு முன் பணமாக பயன்படுத்திக்கிட்டு, மீதி 4 லட்சம் ரூபாய்க்கு கார் லோன் வாங்கிக்கலாம். இதுக்காக மாதம் 10,300 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டிவரும். இன்னும் ஒரு வருஷத்துல நகைக் கடன் முடிஞ்சுடும்ங்கறதால நகைக் கடனுக்காக கட்டிட்டு வந்த இ.எம்.ஐ. 11,000 ரூபாயை கார் லோன் இ.எம்ஐ-க்கு பயன்படுத் திக்கலாம்.
ஏற்கெனவே எடுத்து வச்சிருக்குற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்யுறதுக்கு முன்னாடி தன் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 16,300 ரூபாய்), ராஜசேகர் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு இன்னொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 19,700 ரூபாய்) எடுக்க வேண்டும்.
அனுராதாவும் அவர் கணவரும் தனியா மெடிக்ளைம் எதுவும் எடுத்து வச்சுக்காம அலுவலகத்துல மட்டுமே எடுத்து வச்சிருக்காங்க. ஒருவேளை அந்த அலுவலகத்தை விட்டு வந்துட்டா, அந்த பாலிசியால பிரயோஜனமில்லை.  எனவே, குழந்தை பொறந்ததுக்கு பிறகு தனியா மூன்று  லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து வச்சுக்குறது நல்லது. இதுக்காக வருடம் 6,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்''
குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு..!
குழந்தையின் கல்லூரி செலவுக்காக இன்னும் 18 வருஷம் கழிச்சு 25 லட்சம் ரூபாய் வரை வேணும்னு சொன்னாங்க அனுராதா.
அதனால, இன்றிலிருந்து மாசம் 2,500 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 18 வருஷம் முதலீடு பண்ணிட்டு வந்தா, முதிர்வின்போது 27.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்த வச்சு நல்ல முறையில கல்வியை குடுக்க முடியும்.
24 வருஷம் கழிச்சு செய்யப் போற கல்யாணத்துக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறாங்க. இதுக்காக மாசம் 1,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 24 வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதிர்வின்போது 28.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதை வச்சு கல்யாணத்தை அமர்க்களமா செஞ்சு முடிச்சிடலாம்.
வெளிநாடுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற அனுராதாவின் ஆசைக்கு மாதம் 6,000 வீதம் 5 வருடத்திற்கு 12 % வருமானம் தரும் பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.  
ஓய்வு காலத்துக்கு..!
அனுராதாவும், ராஜசேகரும் 56 வயசுல ரிட்டையர் ஆக ஆசைப்படுறாங்க. ஓய்வு காலத்துல மாசம் 50,000 ரூபாய் வருமானம் போதும்னாங்க. ஆனா, இன்னும் 25 வருஷம் கழிச்சு பார்க்கும் போது 50,000 ரூபாயை வச்சுகிட்டு குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாது. குறைந்தது 1 லட்சமாவது தேவைப்படும். இதுக்காக மாதம் 5,000 ரூபாயை 12% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 25 வருஷம் முதலீடு செய்துட்டு வந்தா, ஆண்டு கடைசியில 83.63 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை 12% வருமானம் கிடைக்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இத்துடன் வீட்டுக் கடனை மாற்றி அமைக்கும் விதத்தில் மேலும் 75,000 ரூபாய் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஓய்வு காலத்தில் சந்தோஷமாகவே வாழலாம்!  இவர்களுக்கு மேலும் சில வருடங்கள் கழித்து கடன்கள் எல்லாம் முடிந்து சேமிப்பு கூடும்போது நிதித் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை இன்னும் மேம்படும்.

My Second

Sunday 9 October 2011

My First Financial Planning Article in Naanayam Vikatan on 9th October 2011

நேற்று... இன்று... நாளை! 
குடும்ப நிதி ஆலோசனை
''எதிர்காலத்துல என் புள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்கணும்ங்கறது என் ஆசை கிடையாது. என்னால முடிஞ்ச வரைக்கும் கடன்படாம ரெண்டு குழந்தைகளையும் நல்லா படிக்க வைக்கணும். இதுதான் என் லட்சியம்'' என்று தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார், சுரேஷ்ராஜ் (வயது 29). இவரது மனைவி விமலா (வயது 29), குழந்தைகள் ஜனனி (வயது 6) மற்றும் ராகுல் (வயது 3) மூவரும் பெங்களூருவில் வசித்து வர, சுரேஷ்ராஜ் மட்டும் மும்பையில் அரசாங்க உத்யோகத்தில் இருக்கிறார்.
இவரது மாதச் சம்பளத்தில் பிடித்தம் போக கைக்கு வருவது 15,000 ரூபாய். ஓய்வு நேரத்தில் உழைப்பதன் மூலம் மாதம் 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார். மனைவி விமலா குழந்தைகளை பொறுப் பாகக் கவனித்துக் கொண்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார். இவருக்கு மாதச் சம்பளம் 6,000 ரூபாய். ஆக, இவர்களது மொத்த மாதச் சம்பளம் 22,500 ரூபாய். ஜனனி பெங்களூருவில் தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறாள்.
'தர்மபுரியில ஊத்தங்கரை பக்கத்துல இருக்கிற பெரியதல் லப்பாடி என் சொந்த ஊரு. பத்து வருஷத்துக்கு முன்னாடி பெங்களூருவில இருக்குற ஆட்டோமொபைல் கம்பெனியில  வேலைக்குச் சேர்ந்தேன். அரசாங்க உத்யோகஸ்தனாகணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை. அதனால வேலை செஞ்சுகிட்டே படிச்சு அரசாங்க உத்யோகத்துக்கான பரிட்சை எழுதினேன். நான் பட்ட கஷ்டம் வீண் போகலை. மூணு வருஷத்துக்கு முன்னாடி மும்பை  ரயில்வே துறையில வேலைக்கு வந்து சேரச் சொன்னாங்க. இப்ப கடவுள் புண்ணியத்துல மனைவி, குழந்தைகள்னு சந்தோஷமா இருக்கோம். ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா, மும்பையில இருந்து மனைவி குழந்தைகளை மூணு மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பார்த்துட்டுப் போக முடியுது'' என்றவர், அடுத்து தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டார்.
''சொத்துன்னு பார்த்தா சொந்த ஊருல இருக்குற வீடு மட்டும்தான். கிராமம்ங்கறதால இப்ப அந்த வீட்டை வித்தாகூட 1.75 லட்ச ரூபாய்க்குதான் போகும். மனைவியோட தங்க நகை 13 சவரன் இருக்கும். சம்பாதிக்கற பணம் இப்ப செஞ்சுட்டு வற்ற சேமிப்புக்கும், செலவுக்குமே சரியா போயிடுது. எதிர்காலத்துக்கு சேமிக்கணும்னா என்ன செய்யுறதுன்னே தெரியல'' என்றார்.
''ஜனனியை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கணும். இன்னும் 12 வருஷம் கழிச்சு படிப்புச் செலவுக்கு 10 லட்சம் ரூபாயாவது தேவைப்படும். ராகுலை பி.இ. படிக்க வைக்கணும்; இதுக்கு 15 வருஷம் கழிச்சு
20 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஜனனிக்கு 25 வயசுல கல்யாணம் பண்ணனும். இதுக்கு இன்னும் 19 வருஷம் இருக்கு. அதுக்குள்ள 20 லட்சம் ரூபாயை எப்படியாவது புரட்டணும்.
ராகுலுக்கு 27 வயசுல கல்யாணம் பண்றப்ப, எங்களுக்கு அதிகம் செலவாகாதுங்கிறதால அஞ்சு லட்சம் ரூபாய் இருந்தாப் போதும். பெங்களூருவில அஞ்சு வருஷத்துக்குள்ள எப்படியாவது ஃபிளாட் வாங்கிடணும். இப்ப வாங்கணும்னா 15 லட்சம் தேவைப்படும். அஞ்சு வருஷம்ங்கற போது குறைந்த பட்சம் 25 லட்சமாவது தேவைப் படும். அப்புறம் என்னோட ஓய்வு காலத்துல மாதம் 12,000 ரூபாய் வருமானம் வந்தால் நானும் என் மனைவியும் புள்ளைங் களுக்கு தொந்தரவு தராம சிக்கனமா குடும்பத்த நடத்திக் குவோம்'' என்று எதிர்காலத் தேவைகளை விளக்கமாகச் சொல்லி முடித்தார்.
இவரது குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து ஆலோசனை சொல்லத் தயாரானார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நிதி ஆலோசகர் பத்மநாபன்.
''சிக்கனமாகச் செலவு செய்து கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார் சுரேஷ்ராஜ். இவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எதிர்காலத்துக்கான சிந்தனை யுடன் இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்'' என்றவர், எதிர்கால பாதுகாப்பிற்காக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சொன்னார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்..!
''சுரேஷ்ராஜ் எதிர்கால பாதுகாப்பு கருதி ஜீவன் சரல் மற்றும் இரண்டு பென்ஷன் பிளான்களை எடுத்து வைத்திருக் கிறார். இதற்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்து விடுவது நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸுக்கு வருடம் 5,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டிவரும். இது தவிர, தனக்கும் மனைவி விமலா மற்றும் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வருடம் 8,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும்'' என்றவர், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு எப்படி முதலீடு செய்வது என்பதை விளக்கினார்.
மகளின் கல்வி, திருமணத்துக்கு..!
''சுரேஷ்ராஜின் உறவினர்கள் எல்லோரும் அரசாங்க பதவியில் இருப்பதால் அவர்களுக்கு மத்தியில் தனது மகள் ஜனனியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார். 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் (எஸ்.ஐ.பி. முறையில்) மாதம் தோறும் 2,000 ரூபாய் வீதம் 11 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், முடிவில் 6.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு முன்னதாக ஏதேனுமொரு பட்டப் படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பதால் கல்லூரி கட்டணத்திற்குக் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைத்திருக்கும் இந்த 6.5 லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மீதி இருக்கும் 1.5 லட்சத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 2,000 ரூபாயை முதலீடு செய்து வந்தால், ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குத் தேவையான மீதி ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்துவிடும்.
அவசரத் தேவைக்காக 50,000 ரூபாயில் இரண்டு சீட்டுகளை போட்டு வைத்திருக்கிறார் சுரேஷ்ராஜ். இதற்காக சீட்டு ஒன்றுக்கு மாதம் 2,000 ரூபாய் கட்டி வருகிறார். ஒரு சீட்டு ஆரம்பித்து 12 மாதமும் மற்றொரு சீட்டு ஆரம்பித்து 2 மாதமும்தான் ஆகியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய 50,000 ரூபாய் சீட்டிலிருந்து விலகிவிட்டு மற்றொரு சீட்டை தொடர்ந்து சேமித்து வருவது அவசரத் தேவைக்குப் போதுமானது.
ஓராண்டுக்குள் இந்த சீட்டு முடிந்ததும் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் 18 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஜனனிக்கு 25 வயதில் திருமணம் செய்ய தேவைப்படும் 20 லட்சத்திற்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.

ராகுலின் கல்வி, திருமணத்திற்கு..!
''ராகுலை பி.இ. படிக்க வைக்க 20 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார். நீண்ட காலத்தில் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 3,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்து வருவதன் மூலம் கல்லூரி படிப்புக்குத் தேவையான முழுப் பணமும் கிடைத்துவிடும். இதை பயன்படுத்தி ராகுலை நல்ல பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கலாம்.
ராகுல் தன்னுடய 22 வயதில் பி.இ. பட்டதாரியாகி இருப்பார். அதன் பிறகு ராகுல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். இந்த பணத்தை வேறெந்த விஷயத்திற்கும் பயன்படுத்தாமல் ராகுலின் திருமணத்திற்கென்று ஐந்து ஆண்டுகள் சேமித்து வருவதன் மூலம் ராகுலுக்கு 27 வயதில் நல்ல முறையில் திருமணத்தை செய்து முடிக்கலாம்'' என்றவர், ஓய்வு காலத்துக்கான திட்டத்தையும் சொன்னார்.
ஓய்வு காலத்துக்கு..!
''ஓய்வு காலத்தில் மாதம் 12,000 ரூபாய் இருந்தால் போதும் என்கிறார். இன்றைய நிலவரப்படி சுரேஜ்ராஜின் குடும்பச் செலவு 22,500 ரூபாய். இதே போல் 31 ஆண்டுகள் கழித்தும் செலவு செய்ய நினைத்தால் அன்றைய நிலவரப்படி இவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்காக ஓய்வு காலம் வரை மாதம் 1,000 ரூபாயை (எதிர்பார்க்கக் கூடிய வருமானம் 16%) ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 31 ஆண்டுகள் முதலீடு செய்து வர வேண்டும். முடிவில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்தால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, சுரேஷ்ராஜுக்கு அரசிடமிருந்து மாத பென்ஷன் கிடைக்கும். இதன் மூலம் ஓய்வு காலத்தை சந்தோஷமாக கழிக்கலாம்'' என்றவர், சுரேஷ்ராஜின் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிற ஆசைக்கு என்ன செய்யலாம் என்பதையும் சொன்னார்.
''ஐந்து ஆண்டுக்குள் பெங்களூருவில் 25 லட்சம் ரூபாயில் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிறார். இப்போது இருக்கும் குடும்ப நிதி நிலைமை இப்படியே தொடர்ந்து நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஃபிளாட் வாங்கும் ஆசையைத் தள்ளிப் போடுவது நல்லது.
புதிதாக டேர்ம் பிளான் எடுத்து இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதின் மூலம் கிடைக்கும் 4,400 ரூபாயுடன், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு வந்து செல்லும்போது செய்யும் தேவையற்ற செலவுகளைக் குறைத்து கொண்டு, பகுதி நேர வேலையின் மூலம் இன்னுமொரு 1,500 ரூபாய் அதிகமாகச் சம்பாதித்தால் எதிர்கால முதலீட்டுக்குத் தேவையான தொகை கிடைத்துவிடும். இதை வைத்து மேலே சொன்னபடி முதலீடு செய்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.'' வாழ்த்துக்கள்!  
- செ.கார்த்திகேயன்

Monday 26 September 2011

How to Get a Home Loan, Free of Cost?

Today, it’s hard to find anyone without a home loan. Most individuals, who are less than 30 years old, create liability before they think of savings.  Most of us who have taken home loan and paying EMI, month after month are always worried about the interest movement. As the loan tenure increases the repayment will jump. For instance if you take 20 years loan, you repay 160% more than your loan at the rate of 11.75%.
 
For example, if you take Rs 25 lakhs of home loan at the rate of 10.5% (Prevailing Rate), then the EMI would be 24,959, and you end up paying Rs. 59,90,279. It means that your total interest outgo is Rs 34.9 lakhs, which is 140% more!
Housing Loan EMI Calculator

Loan Amount 
2500000

Loan Term
20

Payments Per Year
12

Rate of Interest
10.50%

2.396112
Monthly Installment 
24,959
240
5990279

In other words, only after paying nearly Rs.60 lakhs over a 20 year period, the house will be yours.
Hope you all are clear up to this. Now I am going to offer a solution wherein you will get all your money back at the end of the tenure, seems to be interesting!
Two Important Points you have to take care before taking a home loan
  1. Always go for a maximum loan you are eligible for with maximum tenure, even if you have money or some relatives are contributing something for your home loan.
  2. Don’t prepay whenever you get some windfall income or bonus money.
Reaction of people to Home Loan during the tenure of their period
Most of us are not allowing the home loan to continue till the tenure. We try to close as early as possible and often feel that we are paying too much towards interest and also want to be relieved from the home loan burden. The different types of reactions are as follows.
1.      We took lesser years instead of eligible 20 years, feel that they pay less interest and close the loan quickly.
2.      We go for eligible 20 years, but planning to prepay and close as early as possible may be 3 or 4 full lump sum. Often completes in less than 7 years.
3.      We don’t have huge lump sum, yet we close the loan with whatever we got and it will be between 12 and 15 years.

Home Loan is a Boon or Bane?
The beauty of the home loan is; it creates some discipline and commitment which we normally do not exhibit on our own which is really good for the individual as well as the country.
  1. To me it is BOON because it creates corpus for your retirement kitty. The home loan interest rates are normally around 10% in the last 10 years. Even if we assume 11% interest rate, it is only diminishing interest. For 30 lakhs of home loan for 20 years the EMI would be Rs. 30,966 only. Effectively one is paying 1.47 times more which means for 30 lakhs he ends up paying around Rs. 74.31 Lakhs.
Housing Loan EMI Calculator

Solution 1 - Compound Interest
Loan Amount 
30,00,000

SIP Amount
6,000
Per Month
Loan Term
20

Tenor
20
Years
Payments Per Year
12

Return
15.00%
p.a
Rate of Interest
11.00%
Multiplier
2.48
Fund Value
90,95,730

EMI
30,966
240
 74,31,756
Investment
14,40,000

Multiplier
6.3

Scenario 1
Person who takes 20 years housing loan have to initiate another 20% of EMI value towards SIP investment. For example in the above case, 20% would be Rs.6000 and if the returns are assumed at the rate of 15% CAGR (This number is arrived based on any consecutive block of 10 years, the well-diversified equity funds worst returns are always 15%) in the next 20 years, the value would be Rs. 90.95 Lakhs, whereas the individual would have paid home loan EMI totally Rs. 72,31,840 and SIP investment Rs. 14,40,000. If you add together the value will become Rs. 88,71,840 only. Which means if the individual decided to pay another 20% the house will become free the additional 20% will fetch 100% of your money back.
Scenario 2
If an individual takes 15 years housing loan it is better to switch to 20 years, the additional amount Rs. 3,132 (34,098-30,966=3,132) can be systematically invested for the next 15 years in a well-diversified equity mutual fund which will fetch Rs. 21,19,935.
However the individual needs to pay an EMI of Rs 30,966 for the extended 5 years. This EMI requirement can be funded through his SIP investment, he can start withdrawing Rs. 30,966 for the next 5 years from the mutual fund and pay-off the EMI for the extended 5 year period. Even after paying off the loan there will be a residue investment of Rs. 17,24,289  left in his investment portfolio. By simply changing from 15 years to 20 years one can profit Rs. 17.25 Lakhs by using interest rate arbitrage.

Housing Loan EMI Calculator

Solution 1 - Compound Interest
Loan Amount 
30,00,000

SIP Amount
3,132
Per Month
Loan Term
15

Tenor
15
Years
Payments Per Year
12

Return
15.00%
p.a
Rate of Interest
11.00%
Multiplier
2.73
Fund Value
21,19,935

Monthly Installment 
34,098
240
 81,83,498
Investment
5,63,760

Multiplier
3.8

Scenario 3
If an individual takes 10 year housing loan it is better to switch to 20 years (provided their age permits). By extending the period he would save Rs 10,359 on EMI. This saving of Rs. 10,359 (34,098-30,966=3,132) can be systematically invested for the next 10 years in a well-diversified equity mutual fund will grow into a corpus of Rs 28,86,611 @ CAGR of 15%.
However the individual needs to pay an EMI of Rs 30,966 for the extended 10 years. This EMI requirement can be funded through his SIP investment; he can start withdrawing Rs. 30,966 for the next 10 years from the mutual fund and pay-off the EMI for the extended 10 year period. Even after paying off the loan there will be a residue investment of Rs. 12,43,080  left in his investment portfolio. By simply changing from 10 years to 20 years one can profit Rs. 12.43 Lakhs by using interest rate arbitrage.
Housing Loan EMI Calculator

Solution 1 - Compound Interest
Loan Amount 
30,00,000

SIP Amount
10,359
Per Month
Loan Term
10

Tenor
10
Years
Payments Per Year
12

Return
15.00%
p.a
Rate of Interest
11.00%
Multiplier
3.31
Fund Value
28,86,611

Monthly Installment 
41,325
240
 99,18,001
Investment
12,43,080

Multiplier
2.3

The Solution is:
1.      Whatever you pay as EMI for the next 20 years will be given to you at the end of the 20th year, most probably with bank interest. Virtually free of cost.
2.      With no social security, those who joined the government services after 2004 and without saying private organizations, are not entitled for retirement benefits like pension in their golden years. The money which we paid as EMI, if it comes back at the end of the 20yth year, one can use that corpus as a pension fund which in the above case will be Rs 50,000 per month comfortably. So your home loan what majority of us considered as a burden or liability indirectly creates your retirement corpus!!!
Is it Interesting?
Do you want to know how it works?
Provide me your home loan details and I will make your house free of cost at the end of the tenure. Since each individual home loan is different, we can customize based on your needs.