Pages

Sunday 8 January 2012

My Fourth Financial Planning Article in Naanayam Vikatan 8th January 2012


நேற்று... இன்று... நாளை! 
 
குடும்ப நிதி ஆலோசனை
சாதாரண மனிதர்கள் முதல் மெத்தப்படித்தவர்கள் வரை எல்லோருக்கும் குடும்ப நிதித் திட்டமிடல் கட்டாயம் தேவை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பத்ரிநாராயணன். தனியார் கல்லூரி பேராசிரியரான இவரது வருமானம் பிடித்தம் போக 27,750 ரூபாய். மனைவி துர்காபாய் குடும்பத்தலைவி. மகன் பாலகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது மாத சம்பளம் பிடித்தம் போக 10,400 ரூபாய். ஆக தந்தையும், மகனுமாக சேர்த்து மாதம் 38,150 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். இது போக வீட்டு வாடகை மூலம் மாதம் 2,000 ரூபாய் கிடைக்கிறது.
''வீட்டுச் செலவு, என் பெற்றோருக்கு தருகிற பணம், மகனுக்கு ஆகும் செலவுன்னு மாசம் 19,350 ரூபாய் செலவாகுது. இதுபோக ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு மாதம் 4,400 ரூபாய் போயிடுது. குடும்பத் தேவைக்காக வங்கியில் வாங்கியிருந்த 1.41 லட்சம் ரூபாய் பெர்சனல் லோனுக்கு மாசத்திற்கு 5,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றேன்.  இதெல்லாம் மிஞ்சி நிக்கிற பணத்துல வீடு வாசல் வாங்கி, என் பையனோட எதிர்காலத்துக்கும், என் ஓய்வுகாலத்துக்கும் பிளான் பண்ணனும். அதுக்கு நீங்கதான் வழி சொல்லணும்!'' என்றார் பத்ரி நாராயணன்.
அவர் தந்த விவரங்களை வைத்து குடும்ப நிதி ஆலோசனை தந்தார்  நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.

என்ன செய்யவேண்டும்?
''எல்லா செலவுகளும் போக, எதிர்கால முதலீட்டுக்காக 6,425 ரூபாய் இருக்கிறது. இதை வைத்து இவருடைய எல்லா எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. அதனால் ஆரம்பித்து ஒரு மாதமேயான இரண்டு சீட்டையும் நிறுத்திவிடுவது நல்லது. இதனால் சீட்டுக்காக மாதம் செலுத்தும் 5,000 ரூபாய் மிச்சமாகும்.
கிராமிய போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை தன் பெயரிலும், மனைவி பெயரிலும் எடுத்து வைத்திருக்கிறார். இந்த இரண்டு பாலிசிகளுக்காக மட்டுமே வருடம் 24,000 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். 2034-ல் கிடைக்கக்கூடிய 6 லட்சம் ரூபாய்க்காக இவ்வளவு மெனக்கெடத் தேவையில்லை.  அதனால் இதில் ஒரு பாலிசியை உடனே சரண்டர் செய்துவிடலாம். இதனால் மாதம் 1,000 ரூபாய் மீதமாகும்.
இது தவிர, லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் எண்டோவ்மென்ட் பாலிசி, ஜீவன் ஆனந்த், மணிபேக் மற்றும் பீமா கோல்டு பாலிசிகளை சரண்டர் செய்துவிடலாம். இதனாலும் மாதம் 2,200 ரூபாய் வரை மிச்சமாகும். இதெல்லாம் சேர்த்தால் பத்ரிநாராயணனிடம் மொத்தம் 14,600 ரூபாய் இருக்கும்.
இனி இவர் 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். இதற்கு வருடம் 11,600 ரூபாய் பிரீமியம் கட்டவேண்டும். இதுபோக குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேர்த்து 3 லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஆண்டு பிரீமியம் 6,400 ரூபாய்.!

கல்யாணத்துக்கான முதலீடு..!
* மகன் பாலகுமாரின் கல்யாணச் செலவுக்கு 3 லட்சம் ரூபாய் தேவை. இதற்கு இப்போதிருந்தே 3 ஆண்டு களுக்கு மாதம் 7,000 ரூபாய் வீதம் 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்க!
மகனுக்கு சென்னையில் வீடு கட்டித்தர ஆசைப்படுகிறார். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வீடு வாங்க 28 லட்சம் ரூபாய் ஆகும். அதனால் மாதம் 2,250 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்யவேண்டும். இதன் மூலம் 3.62 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சில செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளார். இன்றைய நிலையில் அந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் 80,000 ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை குறைக்க இந்த பணத்தை எடுத்து ஈக்விட்டி டைவர்சிஃபைட் வகையில் மறுமுதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகள் கழித்து வருமானம் 1.60 லட்சம் கிடைக்கும். இந்த இரண்டையும் சேர்த்தால் கிடைக்கும் 5.22 லட்சம் ரூபாயை வீடு வாங்க முன்பணத் தொகைக்கு பயன்படுத்திக் கொண்டு, மீதிப் பணத்தை வங்கியில் கடனாக வாங்கலாம். தந்தை, மகன் சம்பளம் உயர உயர, இ.எம்.ஐ.யை எளிதாக கட்டிக் கொள்ளலாம்.
ஓய்வுகாலத்திற்கு...!
பத்ரிநாராயணனுக்கும் அவர் மனைவிக்கும்  ஓய்வு காலத்தில் நல்லபடியாக இருக்க 40,000 ரூபாய் தேவை. இதற்கு இன்றிலிருந்து ஓய்வுகாலம் வரை மாதம் 3,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும். ஏற்கெனவே உள்ள கடன், மார்ச் 2013-ல் முடிவதால், அதற்காக கட்டி வந்த இ.எம்.ஐ. தொகை 5,000 ரூபாயை அன்றிலிருந்து, 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இந்த இரு முதலீடுகளும் முடியும் போது கிடைக்கும் வருமானம் 48.90 லட்ச ரூபாய் கிடைக்கும். இதை ரிஸ்க் இல்லாத முதலீட்டுக்கு மாற்றினால் ஓய்வுகாலத்தில் மாதம் 40,000 ரூபாய் கிடைக்கும். நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!''
-செ.கார்த்திகேயன்,

No comments:

Post a Comment