Pages

Sunday, 13 May 2012

My Eighth Financial Planning Article in Naanayam Vikatan on 13 May 2012

நேற்று... இன்று... நாளை!
''எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு. எங்களுக்கு குழந்தை இல்லை. நானும் என் மனைவியும் குழந்தை பேறுக்காக மருத்துவம் பார்க்கலாம்னு இருக்கோம். ரெண்டு வருஷ மருத்துவத்துக்கு மொத்தம் ரெண்டு லட்ச ரூபாய் (மாதம் 8,600 ரூபாய்) தேவைப்படும். தங்கச்சி கல்யாணத்துக்காக வாங்கிய கடன், தனிநபர் கடன், நகைக் கடன், கார் கடன்னு மொத்தம் 14.35 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கேன். இதுக்கு மட்டுமே மாசம் 29,500 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றேன். அதனால் சம்பாத்தியம் இ.எம்.ஐ. கட்டவும், குடும்பச் செலவுக்குமே சரியா போயிடுது.
டனை அடைச்சதுக்கு பிறகு நாமக்கல்லில் இருக்குற 1,200 சதுர அடி நிலத்துல 15 லட்ச ரூபாய்ல கல்லூரி மாணவர்களுக்காக வாடகை வீடு கட்டி விடணும். சென்னை யில நான்கு லட்ச ரூபாயில பெண்களுக்கான விடுதி அமைக்கணும். இவற்றின் மூலம் வருமானம் கூடுதலாகும்.  அந்த தொகையை முதலீடு செய்தா நிச்சயமா என்னுடைய எதிர்கால தேவைகள் பூர்த்தியாகும். இது போக என்னுடைய ஓய்வு காலத்துக்குன்னு மாதம் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாயாவது தேவைப்படும். அதுக்கான முதலீட்டை ஆரம்பிக்கணும். இந்த தேவைகளுக்காக என்ன வெல்லாம் செய்யணும்னு நீங்க தான் வழிகாட்டணும்'' என்று சென்னை மடிப்பாக்கத்தில் இருந்து நிதி ஆலோசனை கேட்டு வந்திருந்தார் ஜன.நாராயண விக்னேஷ்வரன்.
வக்கீலாக இருக்கும் இவருக்கு 35 வயது.  மாதச் சம்பளம் 55,000 ரூபாய்; பிடித்தம் போக 49,500 ரூபாய். இதுபோக பகுதி நேர வேலை மூலம் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மனைவி சங்கீதா விரிவுரையாளர். தற்போது வீட்டில் இல்லத்தரசியாக இருந்து வருகிறார். அடுத்த மாதம் முதல் டியூஷன் எடுக்கப் போவதாகச் சொல்கிறார். இதன் மூலம் 5,500 ரூபாய் வருமானம் வரக் கூடும். ஆக, அடுத்த மாதத் திலிருந்து குடும்பத்தின் மொத்த வருமானம் 70,000 ரூபாய்.
எப்படி திட்டமிட்டால் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்..? ஜன.நாராயண விக்னேஷ்வரன் குடும்பத்துக்கு திட்டமிட்டுத் தருகிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''இவருடைய குடும்பச் செலவுகள் மொத்தம் 18,700 ரூபாய். ஒரு லட்சம், 1.5 லட்சம் என இரண்டு சீட்டு போட்டு வருகிறார். இதற்காக மாதம் 10,900 ரூபாய் சேமித்து வருகிறார். கடனுக்கான இ.எம்.ஐ. 29,500 ரூபாய் போய்விடுகிறது. மீதம் இருக்கும் 10,900 ரூபாயில் இன்றிலிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குத் தேவைப்படும் மருத்துவச் செலவுகளுக்கு மாதம் 8,600 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். மீதியிருக்கும் 2,300 ரூபாயை புதிதாக எடுக்கப் போகும் இன்ஷூரன்ஸ் பிரீமியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் எதிர்கால முதலீட்டுக்கென துளிகூட பணம் கிடையாது. அதற்காக எதிர்காலத்துக்கு முதலீடு செய்யாமல் இருக்க முடியாது.
அதற்கான வழிகளை பார்ப்போம்.!’
இன்ஷூரன்ஸ்!
ஏற்கெனவே எடுத்திருந்த இன்ஷூரன்ஸ்கள் எல்லாம் லேப்ஸ் ஆகிவிட்டதால், தற்போது  இன்ஷூரன்ஸ் எதுவும் இல்லை. தன் பெயரில் ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு, இவருக்கும் , மனைவிக்கும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இருவருக்கும் வயது குறைவு என்பதால் இதற்கான பிரீமியமும் குறைவாகத்தான் கட்ட வேண்டி இருக்கும். இரண்டு பாலிசிக்கும் சேர்த்து ஆண்டு பிரீமியம் 27,600 ரூபாய்தான். மேலே சொன்னது போல மீதமிருக்கும் 2,300 ரூபாயை மாதா மாதம் சேமித்து வந்தால் ஆண்டு கடைசியில் சுலபமாக பிரீமியத்தைக் கட்டி விடலாம்.

இவருக்கான திட்டம்!
இவர் போட்டுவரும் சீட்டை வருகிற மாதத்தில் எடுக்கப் போவதாகச் சொல்லியிருந்தார். அதிலிருந்து 60,000 ரூபாய் கிடைக்கும். இதனைக் கொண்டு, எந்தக் கடனை அடைக்கலாம் என்று பார்ப்போம். 50,000 ரூபாய் வீதம் இரண்டு இடத்தில் கடன் வாங்கியிருக்கிறார். ஒரு 50,000 ரூபாய்க்கு மாதம் 2,500 ரூபாய் வட்டி மட்டுமே கட்டி வருகிறார். மற்றொரு 50,000 ரூபாய்க்கு வட்டி இல்லை. முதலில் வட்டி கட்டி வரும் 50,000 ரூபாய் கடனை கட்டி விடுவது நல்லது. இதற்காக மாதம் கட்டி வந்த 2,500 ரூபாய் வட்டி மிச்சமாகும். மீதி 10,000 ரூபாய் இருக்கும்.
அடுத்த 8 மாதத்தில் மற்றொரு சீட்டை எடுக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதால், அந்த சீட்டிலிருந்து கிடைக்கும் 1.10 லட்சம் ரூபாய், கையில் இருக்கும் 10,000 ரூபாய்,  முதலில் அடைத்த கடனுக்கான வட்டி 2,500 ரூபாயை 8 மாதம் சேமித்து வந்தால் கிடைக்கும் 20,000 ரூபாய் போன்ற தொகைகளைக் கொண்டு பிற கடன்களை அடைக்கலாம்.
இதிலிருந்து 50,000 ரூபாயை நண்பர்களிடம் வாங்கிய வட்டியில்லா கடனை அடைத்து விட்டால் மீதி 90,000 ரூபாய் இருக்கும். இன்னும் எட்டு மாதம் கழித்து ஜனவரி ஆரம்பத்தில் வங்கியில் வாங்கிய தனிநபர் கடன் 45,000 ரூபாயாக குறைந்திருக்கும். இதனை அடைத்து விடலாம். மீதி இருக்கும் 45,000 ரூபாயைப் பயன்படுத்தி நகைக் கடனை அடைத்தால் நகைக் கடன் 2.30 லட்சத்திலிருந்து 1.85 லட்ச ரூபாயாகக் குறையும். கடன் தொகை குறையும்போது அதற்காக கட்டி வந்த வட்டித் தொகையும் 1,900 ரூபாயிலிருந்து 1,500 ஆகக் குறையும். அதனால் மாதம் 400 ரூபாய் நகைக் கடன் வட்டி மிச்சமாகும். ஆக, இப்போது எதிர்கால முதலீட்டிற்கு 5,400 ரூபாய் இருக்கும்.
இந்த 5,400 ரூபாயைத் தொடர்ந்து 24 மாதங்கள் 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 1.47 லட்சம் ரூபாய் கிடைக் கும். அந்த சமயத்தில்  பகுதி நேர வேலையின் மூலம் 50,000 ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார் விக்னேஷ் வரன். ஆக, போனஸ் தொகை 50,000 மற்றும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் 1.47 லட்சம் ரூபாயையும் சேர்த்து நகைக் கடனை அடைத்து விடலாம்.
இப்போது நகைக் கடனுக்காக கட்டி வந்த வட்டித் தொகையும் சேர்த்து எதிர்கால முதலீட்டிற்கு 6,900 ரூபாய் பாக்கி இருக்கும். இந்த சமயத்தில் குழந்தை பெறுவதற்கான மருத்துவச் செலவுகளும் முடிந்திருக்கும் என்பதால் அதற்காக செலவு செய்து வந்த 8,600 ரூபாயையும் எதிர்கால முதலீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 6,900 ரூபாய் மற்றும் 8,600 சேர்த்து கையிலி ருக்கும் 15,500 ரூபாயை அடுத்த 21 மாதங்களுக்கு 9% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் எம்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 3.54 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
முதல் கடன் அடைக்க ஆரம்பித்ததிலிருந்து 57 மாதங்கள் கழித்து இந்த 3.54 லட்சம் கிடைப்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் கார் கடன் 3.51 லட்சம் ரூபாயாகக் குறைந்திருக்கும். அதனால் இந்த 3.54 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி கார் கடனையும் அடைத்து விடலாம். இதற் கிடையில் தங்கையின் கல்யாணத்துக்காக வாங்கிய 2.50 லட்சம் ரூபாய் கடனும் மூன்று ஆண்டுகளிலேயே முடிந்திருக்கும் என்பதால் 2016 ஏப்ரலில் அனைத்து கடன் தொல்லையிலிருந்தும் இவர் வெளியேறிவிடுவார்.
தங்கைக்காக வாங்கிய கடன் முடிந்த கையுடன் அதற்காக கட்டி வந்த இ.எம்.ஐ. 7,000 ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் 6.25 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி சென்னையில் விடுதி அமைக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதன் பிறகு இந்த தொகையை 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஓய்வுக் காலத்துக்கென்று          17 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் முதிர்வின் போது    46.75 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
கார் கடனுக்காக கட்டி வந்த இ.எம்.ஐ. 15,500 மற்றும் கார் கடனை அடைக்க செய்த முதலீட்டுத் தொகை 15,500 என மொத்தம் இவர் கையில் 31,000 ரூபாய் பாக்கி இருக்கும். இதிலிருந்து 30,000 ரூபாயை எடுத்து 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்து (அனைத்து கடன்களும் முடிந்த பிறகு) வந்தால் கிடைக்கும் தொகை 24.74 லட்சம் ரூபாய்.
இந்த தொகையைப் பயன்படுத்தி நாமக்கல்லில் உள்ள இடத்தில் வாடகை குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம்.
அதன் பிறகு இந்த 30,000 ரூபாயை முழுக்க ஓய்வுக் காலத்திற்காக 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 16 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். முதிர்வின்போது  2.40 கோடி ரூபாய் கிடைக்கும். ஆக, ஓய்வுக் காலத்திற்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் மொத்த தொகை 2.87 கோடி ரூபாய். இதை                             பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வரும்.
குழந்தை பெற்ற பிறகு சங்கீதா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் அவர் மூலம் கிடைக்கும் வருமானம், விடுதி மற்றும் நாமக்கல்லில் கட்டியிருக்கும் வாடகை வீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை  வைத்து குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்கு முதலீட்டை ஆரம்பிக்கலாம். தற்போது இருக்கும் வருமானத்தைவிட வருமானம் அதிகமாகும்போது இன்னொரு முறை நிதி ஆலோசனை பெறுவது நல்லது. அனைத்து செல்வங்களும் பெற வாழ்த்துக்கள்!

Wednesday, 4 April 2012

How to Face the Sudden Increase of Electricity Bill???



Hope you all aware that the electricity bill is going to be double from April 1st onwards.

When one door closes, another door opens, but unfortunately we always look for the door which is already closed.

No lock is manufactured without Key, for every problem there will be many solutions, but we always concentrate on the problem rather than looking for a solutions.

In life, there is something called area of control and area of not control.

The hike of EB bill is area of not control, so you and I can't do anything about it.

The area of control is how to manage those sudden increases of 100% hike in the EB Bill.

If the sudden increase of EB bills bothers you, then please listen to my practical solutions which are very simple for you to follow and address this issue.

In Mutual fund, very few heard about liquid and liquid plus funds which are similar to your savings account and it is absolutely risk free and it will not participate in the market, so don't worry about the market volatility. In the current scenario, it earns somewhere between 7and 8% interest per annum. Normally, the savings bank account gives 3.5% to 4% and the interest is paid after 6 months by the bank.

People who earns 5 lakhs per annum, normally keep 1 lakh in a bank account for contingency fund, instead of keeping it in a bank account the money can be parked in a liquid fund and for 1 lakh, there will be a minimum of 20 rupees interest per day and for the next 2 months one can earn 1200 rupees. That's what the increased amount of our EB bill.

Reliance mutual fund is offering reliance ATM card, so in between if the investor needs money they can go and withdraw in any one of the ATM across India. IDFC is offering SMS facility to transact online by buying and selling liquid funds in finger tips. All the mutual fund companies are offering this kind of fund.

For the corporates, they will not get any interest in their current account and normally SME and big corporates will have at least a monthly invoice around 1 Crore and it will be coming to their account on 25th of every month and they have to disperse in terms of salaries and other expenses on 1st of every month.

1 Crore in 5 days will earn around 2000 * 5 = 10000 rupees, which normally they allow the present bank to enjoy the benefits and apart from that they will maintain few lakhs and if you calculate the interest then it would be somewhere 15K per month and for 1 year it will be 1.8 lakhs. By simply moving the money here and there they can make 1.8 lakhs, the bigger the corporate the better will be the additional money.

Man and Money should not keep idle; if you try to understand the characteristics of the money then you can probably use it to your advantage.

I would be very happy; if few of the mail recipients understand this and make use of it then the purpose of the mail is fulfilled. For those who do not react immediately will at least know there is a solution but we can look forward little later!

Happy to assist you; in case if you need any clarification on this.

Sunday, 1 April 2012

My Seventh Financial Planning Article in Naanayam Vikatan on 1st April 2012


நேற்று... இன்று... நாளை!
''இதுவரைக்கும் எந்தவொரு முதலீட்டையும் செய்யலை. நாணயம் விகடன் படிச்ச பிறகுதான் நமக்கும், நம்ம குழந்தைகளோட எதிர்காலத்துக்கும் முதலீட்டை ஆரம்பிக்கணும்னு தோணுச்சு. அதனாலதான் உங்ககிட்ட நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருக்கேன்'' என்றார், பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி.
நாற்பத்தாறு வயதான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மாதச் சம்பளம் 25,000 ரூபாய். மனைவி வசந்தி, வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். மூத்த மகன் புவனேஸ் பிளஸ்-டூவும், இளையவன் நிர்மல் குமார் எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
''குடும்பச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, இன்ஷூரன்ஸ் மற்றும் நகைக் கடனுக்கான இ.எம்.ஐ-ன்னு மாதம் 11,600 ரூபாய் செலவாகிறது. இதுபோக மீதம் இருக்குற தொகையைப் பயன்படுத்திதான் குழந்தைகளோட கல்வி, கல்யாணம் மற்றும் என் ஓய்வுகாலத் தேவைகளை பூர்த்தி செஞ்சுக்கணும். சொத்துன்னு பார்த்தா, இப்ப இருக்குற சொந்த வீடு, வாடகைக்கு விட்டிருக்கிற நான்கு வீடுகள், அரை கிரவுண்டு மனை என எல்லாம் சேர்த்து 70 லட்சம் ரூபாய் மதிப்பு வரும்.
இதுபோக, அவசரத் தேவைக்குன்னு வங்கியில ஒரு லட்சம் ரூபாய் கையிருப்பு இருக்கு. ஆனாலும் என் தேவைகளை எப்படி பூர்த்தி செய்யறதுன்னு தெரியலை, நீங்கதான் வழி காட்டணும்'' என்றவருக்கு, நிதி ஆலோசனை சொல்ல தயாரானார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''கைவசம் உள்ள மனையில் பத்து வருடத்தில் வீடு கட்ட  30 லட்சம், புவனேஸை பி.இ. சேர்க்க ஆரம்பச் செலவுக்காக மூன்று லட்சம்,  திருமணத்திற்கு இன்னும் ஒன்பது ஆண்டுகளில் பத்து லட்சம், நிர்மல் குமாரின் கல்விக்கு  ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சம், கல்யாணத்துக்கு 14 ஆண்டுகளில் 12 லட்சம் என தன் பணத் தேவைகளை குறிப்பிட்டிருந்தார் நாராயண மூர்த்தி.
ஆனால், செலவுகள் போக எதிர்கால முதலீட்டிற்கான தொகை 13,400 ரூபாய்தான். இத்தனை தேவைகளுக்கும் இந்த தொகை போதாது. கைவசம் உள்ள அரை கிரவுண்டு மனையை விற்பதன் மூலம்தான் எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டை மேற்கொள்ள முடியும். ஏற்கெனவே சொந்தமாக வீடுகள் இருப்பதால், இன்னொரு வீடு அவசியமா என்பதை யோசிப்பது நல்லது'' என்றவர்,  அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார்.
லைஃப் மற்றும் ஹெல்த்!
ஏற்கெனவே தன் பெயரில் உள்ள நான்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்காக மாதம் 1,800 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார்.
வெறும் மூன்று லட்சம் கவரேஜுக்காக பாலிசிகளை தொடர்வதைவிட, சரண்டர் செய்து விடலாம்.  இதன் மூலம் கிடைக்கும் 1.25 லட்சம் ரூபாயை, அவசர தேவைக்காக ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாயுடன் சேர்த்து வங்கி கணக்கில் போட்டு வைப்பது நல்லது. மாதந்தோறும் மிச்சமாகும் பிரீமியம் பணத்தையும் எதிர்காலத் தேவைகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
நாராயண மூர்த்தி 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 18,000 ரூபாய். அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஐந்து லட்சத்துக்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுப்பதும் அவசியம்.
புவனேஸ் கல்வி மற்றும் திருமணத்திற்கு..!
புவனேஸ் இன்னும் சில மாதங்களில் கல்லூரியில் சேரப் போகிறார். பி.இ. சேர ஆரம்பத்தில் மூன்று லட்சம் பத்தாது. இன்றைய நிலையில் எப்படியும் ஆரம்ப செலவுக்கு ஐந்து லட்சம், நான்கு வருட படிப்புக்கு ஐந்து லட்சம் என மொத்தம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும். இதற்கு, நான் சொன்னபடி மனையை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மூலதன ஆதாய வரி கட்டியது போக  20 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சொல்வதால், அந்த தொகை யிலிருந்து ஐந்து லட்ச ரூபாயை ஆரம்ப கால கல்லூரிச் செலவிற்கும், மீதி இருக்கும் பணத்தில் 2.5 லட்ச ரூபாயை எடுத்து நகைக் கடனையும் அடைத்துவிடலாம்.
கல்லூரிச் செலவுக்குத் தேவைப்படும் மீதிப் பணத்திற்கு நிலத்தை விற்ற பணத்தில் மீதம் இருக்கும் 12.5 லட்ச ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் ஈடுகட்டி விடலாம். 12.5 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்வதின் மூலம்  கிடைக்கும் வருமானத்திலிருந்து வருடா வருடம் 1.25 லட்ச ரூபாயை எடுத்து (10% வருமானம்) கல்லூரி படிப்பு முடியும் வரை (நான்கு ஆண்டுகள்) பயன்படுத்தி பி.இ. படிப்பை நல்லபடியாக முடிக்கலாம். நான்கு வருடம் முடியும்போது 12.5 லட்சம் ரூபாய் 13.70 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
அதன்பிறகு அந்த 13.70 லட்சம் ரூபாயை பிரித்து தேவைக்குத் தகுந்தபடி 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். புவனேஸின் திருமணச் செலவுக்காக 10 லட்சம் ரூபாயை எதிர்பார்ப்பதால்   13.70 லட்சத்திலிருந்து 5.70 லட்சம் ரூபாயை எடுத்து பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால் எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும்.

நிர்மல்குமாரின் கல்வி மற்றும் கல்யாணம்!
நிர்மல் குமாரை டிகிரி படிக்க வைக்க வேண்டும் என்கிறார். இதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து  மூன்று  லட்சம் ரூபாய் தேவைப்படும். எதிர்காலத் தேவைக்காக இருக்கும் 15,200 ரூபாயில் 3,400 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் எதிர்பார்த்த தொகை கிடைத்துவிடும்.
நிர்மல் குமாருக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க 12 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றார். இதற்கு இன்னும் 14 ஆண்டுகள் இருக்கிறது என்பதால் நிர்மல் குமாரின் கல்விக்கான முதலீடு முடிந்தபிறகு அந்த 3,400 ரூபாயை தொடர்ந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் ஒன்பது ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கக் கூடிய தொகை 7.68 லட்சம் ரூபாய்.
13.70 லட்சம் ரூபாயிலிருந்து புவனேஸின் திருமணத்திற்கான முதலீடு போக மீதமிருக்கும் தொகையிலிருந்து 1.50 லட்சம் ரூபாயை எடுத்து 10 ஆண்டுகளுக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 4.65 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, நிர்மல் குமாரின் திருமணத்திற்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த தொகை 12.33 லட்சம் ரூபாய். இதை பயன்படுத்தி திருமணத்தை முடிக்கலாம்.  
ஓய்வுகாலத்திற்கு..!
இன்றுபோலவே ஓய்வு காலத்திலும் சிறப்பாக வாழ மாதம் 50,000 ரூபாய் தேவைப்படும். அதற்கு எதிர்கால முதலீட்டில் மீதமிருக்கும் 11,800 ரூபாயில் 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு 14 ஆண்டுகள் தொடர்ந்தால் கிடைக்கக்கூடிய தொகை 39.54 லட்சம் ரூபாய்.
அதேபோல் 13.70 லட்சம் ரூபாயிலிருந்து புவனேஸ் மற்றும் நிர்மல்குமாரின் திருமணத் திற்கான முதலீடு போக மீதமிருக்கும் 6.50 லட்சம் ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் வருமானம் 20.19 லட்சம் ரூபாய். ஆக, ஓய்வுகாலத்தில் மியூச்சுவல் ஃபண்டின் மூலம் கிடைக்கும் மொத்த தொகை 59.73 லட்சம் ரூபாய்.
இந்த வருமானத்தை 10% வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதா மாதம் 50,000 ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கும். இதைக் கொண்டு ஓய்வுகாலத்தை வளமாக கழிக்கலாம்.
எதிர்கால முதலீட்டிற்காக மீதமிருந்த 15,200 ரூபாய் தொகையிலிருந்து மேலே சொன்ன மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் புதிதாக எடுக்கச் சொல்லியிருக்கும் லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸுக்காக கட்ட வேண்டிய பிரீமியம் போக  கையில் 2,200 ரூபாய் பாக்கி இருக்கிறது. இதை இதரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாழ்த்துகள்!

Sunday, 25 March 2012

SIP - True Wealth Creation


எஸ்.ஐ.பி. முதலீடு; எக்கச்சக்க லாபம்!

இது மார்ச் மாதம் என்பதால் வரிச் சேமிப்புக்காகப் பலரும் பல வகையான முதலீடுகளைப் பற்றி  யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். எது பற்றியும் யோசிக்காமல் அவசர அவசரமாக ஏதோ ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அல்லது ஏதாவது ஒரு வரி சேமிப்பு தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பணத்தைப் போட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் செல்வதுதான் நம்மில் பலரது வழக்கம்.
ரிச் சேமிப்பு என்கிற விஷயத்தில் மட்டும்தான் நாம் இப்படி செய்கிறோம் என்றால்கூட பரவாயில்லை. நீண்டகால முதலீடுகளை செய்யும்போதும் இதேமாதிரி கோட்டைவிடுகிறோம்.  மிகச் சில முதலீட்டாளர்கள் மட்டுமே பலவகையான முதலீட்டுத் திட்டங்களை அலசி ஆராய்ந்து சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவர்களும் அந்த முதலீட்டை நீண்ட காலத்திற்குத் தொடர்கிறார்களா என்றால் இல்லை.
உதாரணமாக, 95-ம் ஆண்டு ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்டில் சுமார் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அந்த தொகை இந்த நேரம் 56 லட்சத்துக்கு மேல் வளர்ந்திருக்கும். ஆனால், இந்த லாபத்தினை எத்தனை பேர் அடைந்திருப்பார்கள்? பலர் பாதியிலேயே பணத்தை எடுத்து வெளியே வந்திருப்பார்கள். ஒரே ஃபண்டில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக யாரையும் நான் இருக்கச் சொல்லவில்லை. ஆனால், ஒரு சரியான ஃபண்டில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்காவது முதலீட்டை தொடர்ந்தால்தான் நல்ல லாபம் பார்க்க முடியும். சரி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான முதலீடு எது?
100 ரூபாய் மதிப்புள்ள பொருள் 85 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே ரூபாய் மதிப்புள்ள பொருள் 115 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், நாம் எந்தப் பொருளை வாங்குவோம்? 85 ரூபாய்க்கு விற்கும் பொருளைத்தான். அதேபோலதான் முதலீட்டுத் திட்டங்களில் சந்தை மதிப்பைவிட அதிகமான விலையில் இருக்கும் முதலீட்டுத் திட்டங்களிலே முதலீடு செய்கிறோம். தற்போதைய நிலையில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை தவிர, மற்ற முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் ஓவர் பிரைஸ்டு-ஆக இருக்கிறது. அதாவது, சமீப காலத்தில் இத்திட்டங்கள் அதிகமாக விலை ஏறி இருக்கிறது.
ஆனால், பங்குச் சந்தை தள்ளுபடி விலையிலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. 1979-ம் ஆண்டு சென்செக்ஸ் 100 புள்ளிகளுடன் ஆரம்பமானது. 1992-ல் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்குச் செல்லும் என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். தற்போதைய நிலையில் கூட, அடுத்த சில வருடங்களில் சென்செக்ஸ் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால், உண்மையில் அப்படி நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
அடுத்த கேள்வி, பங்குச் சந்தையே நல்ல வருமானம் கொடுக்கும் என்றால், எதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இதுவும் சரிதான். ஆனால், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பங்குச் சந்தை சரியான இடம் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
சரியான ஃபண்டினை மட்டும் தேர்வு செய்துவிட்டால் போதும், முதலீட்டை பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். அதிலும், எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டால், வேறு எது பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. சந்தை எப்போது உயரும், எப்போது குறையும் என்பதைக்கூட பார்க்க வேண்டியதில்லை.
சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் சிறந்த முதலீடு என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 10,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை அதிகமாகி விட்டது. மேலும், 4 சதவிகித இந்திய மக்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதன் மதிப்பு சுமார் 5-6 லட்சம் கோடி ரூபாய்.
அதிக எண்ணிக்கையிலான மக்கள், அதிக தொகையை முதலீடு செய்யும்போது இந்தத் தொகை சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலீடாக சந்தைக்கு அதிக பணம் வரும்போது சந்தை உயருவதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. சந்தை உயரும்போது மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் அதிகரிக்கும்.
(தற்போதைய நிலையில் மாதத்துக்கு 1,600 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் துறையால் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி. மூலம் தரும் தொகை இது!)
'சந்தையில் அதிகபட்ச பயம் இருக்கும்போது முதலீடு செய்யுங்கள். சந்தையில் அதிக பேராசை இருக்கும்போது முதலீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற வாரன் பஃபெட்டின் வார்த்தைகளை யோசித்து பாருங்கள். சந்தை இப்போது அதிகபட்ச பயத்தில் இருக்கிறது. உங்களது நீண்ட கால முதலீட்டை தொடங்குவதற்கு சரியான நேரம் இதுதான்!

Sunday, 11 March 2012

My Sixth Financial Planning Article in Naanayam Vikatan on 11th March 2012

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை
''ஒரு வழியாகப் பொண்ண படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. மகன் விருதுநகரில் இன்ஜினீயரிங் இரண்டாம் வருஷம் படிச்சிட்டு இருக்கான். இனி என் தேவையெல்லாம் என்னுடைய ரெண்டு புள்ளைங்களுக்கும் கல்யாணம் செஞ்சு கண் குளிர பார்க்கணும்ங்கறதுதான். அதுக்குத் தேவைப்படும் பணத்துக்கு முதலீட்டை ஆரம்பிக்கணும். எதிர்கால தேவைகளுக்கும் கொஞ்சமா பணத்தச் சேர்த்து வைக்கணும். எதுல முதலீடு செஞ்சா அதிக வருமானம்  கிடைக்கும்னு சொல்லுங்க'' என ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் மதுரையில் அரசு நிறுவனமொன்றில் வேலை பார்த்து வரும் வாசுதேவன்.  
வருக்கு மாதச் சம்பளம் 59,000 ரூபாய். பிடித்தம் போக 42,000 ரூபாய் கையில் கிடைக்கிறது. வீட்டு வாடகை மூலம் 12,000 ரூபாய் கிடைக்கிறது. மனைவி சாந்தி குடும்பத்தலைவி. மகள் கார்த்திகாயினி எம்.பி.ஏ. முடித்துவிட்டு, தற்போது 10,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர உள்ளார். ஆக, குடும்பத்தின் மொத்த வருமானம் 64,000 ரூபாய்.  
''எங்களோட மாதச் செலவு 17,000 ரூபாய். ஏற்கெனவே எனக்கும், என் மனைவிக்கும் இரண்டு பாலிசிகளை (கவரேஜ் ரூ.5 லட்சம்) எடுத்து வச்சிருக்கேன். இதுக்காக கட்டும் பிரீமியம் வருஷத்துக்கு 51,000 ரூபாய். பொண்ணு கல்யாணத்துக்காக நாலு லட்ச ரூபாய்க்கு சீட்டு போட்டிருக்கேன். இன்னும்    18 மாதத்துல சீட்டு முடிஞ்சிடும்.
இதுக்காக மாதம் 8,300 ரூபாய் கட்டிட்டு வர்றேன்.
இதுபோக எதிர்காலச் சேமிப்புக்கு மீதமிருக்கக்கூடிய தொகைன்னு பார்த்தா 34,450 ரூபாய். இதை  கொண்டு என்னுடைய எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற நீங்கதான் வழி காட்டணும்'' என்றவருக்கு ஆலோசனை சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''பொறுப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்றி வரும் வாசுதேவன் தனது தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஐந்து லட்சம் கவரேஜ் கொண்ட இரண்டு பாலிசிகளுக்கு இவர் கட்டும் பிரீமியம் அதிகம். எனவே, இவற்றை உடனே சரண்டர் செய்துவிடுவது நல்லது.
இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வுபெறப் போவதால், இவருக்கு லைஃப் இன்ஷூரன்ஸ்  தேவையிருக்காது. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஹெல்த்கவர் இருக்கிறது என்றாலும், இன்னும் 3 லட்ச ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டும்.
மகளின் திருமணம்!
மகளுக்கு இன்னும் ஓரிரு வருடங்களில் திருமணம் செய்ய நினைக்கிறார். அதற்காக தங்க நகைகளை ஏற்கெனவே சேர்த்து வைத்துவிட்டதால், திருமணச் செலவுக்காக எட்டு லட்சம் தேவை என்றார். எதிர்கால முதலீட்டிற்காக மீதமிருக்கும் 34,450 ரூபாயிலிருந்து 32,000 ரூபாயை எடுத்து 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய லிக்விட் ஃபண்டுகளில் ஓராண்டுக்கு முதலீடு செய்யலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நான்கு லட்சம்,  சீட்டிலிருந்து கிடைக்கும் நான்கு லட்சம் என எட்டு லட்சம் ரூபாயில் திருமணத்தை  முடிக்கலாம்.
மகனின் திருமணம்!
மகன் விஸ்வநாத் கல்விக் கடன் மூலம் படிப்பதால் தனக்கு பெரிய செலவு எதுவுமில்லை என்றார் வாசுதேவன். இன்னும் இரண்டு வருடத்தில் மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கும்போது கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தி கல்விக் கடனை அடைத்துவிடலாம். அந்நேரத்தில் மகளுக்கு திருமணம் நடந்திருக்கும் என்பதால், மகனுடைய வருமானம் குடும்பத்துக்கு கை கொடுக்கும்.  
மகனுக்கு 27 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதால், கார்த்திகாயினியின் திருமணத்திற்கான முதலீடு முடிந்ததும் அந்த 32,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து     76 மாதங்கள் முதலீடு செய்துவர வேண்டும். இதன் மூலம் 9 லட்ச ரூபாய் கிடைக்கும். இதை பயன்படுத்தி மகனின் திருமணத்தை முடிக்கலாம்.

ஓய்வுகாலத்திற்கு..!
மகனின் திருமணத்துக்கான முதலீடு 7,000 ரூபாய் போக மீதமிருக்கும் 25,000 ரூபாயை ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில்     36 மாதங்கள் முதலீடு செய்தால் 10.87 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்து விடுவதால் அதற்காக கட்டி வந்த மாத பிரீமியம் 4,250 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 48 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம்         2.62 லட்சம் ரூபாய்.
இன்னும் 18 மாதங்களில் சீட்டு முடிந்த பிறகு 8,300 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 30 மாதங்கள் முதலீடு செய்வதன் மூலம்   2.91 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆக, ஓய்வுகாலத்தின்போது ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 16.40 லட்சம் ரூபாய்.
இத்தொகையை              பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதால் மாதம் 15,000 ரூபாய் கிடைத்துக் கொண்டிருக்கும். தவிர, மாதம் பென்ஷனாக 30,000 ரூபாயும், வீட்டு வாடகை மூலம் 12,000 ரூபாயும் கிடைக்கும். இதை பயன்படுத்தி ஓய்வுகாலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.
ஓய்வுகாலத்திலும் மகனின் திருமணத்திற்காக முதலீடு செய்ய வேண்டியிருப்பதால் முதலீடு செய்தது போக மீதமிருக்கும் தொகையில் செலவு செய்து கொள்வது உத்தமம். வாழ்த்துக்கள்!

Sunday, 29 January 2012

My Fifth Article in Financial Planning Appeared in Naanayam Vikatan 29th January 2012

நேற்று... இன்று... நாளை! 
 
குடும்ப நிதி ஆலோசனை
''எங்கள் வீட்டில் நாங்கள் இருவருமே வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். எங்களுக்கு ஒரே மகன் ரித்திஸ்ராம். தனியார் பள்ளியில் ப்ரீ கேஜி படித்து வருகிறான். எங்களுக்கு குடும்ப நிதி ஆலோசனை சொல்லுங்களேன்'' என்று கேட்டார்கள் கோவை தினேஷ்-விஜி தம்பதியினர்.
கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ§க்கு பிடித்தம் போக மாதச் சம்பளம் 40,000 ரூபாய். மனைவி விஜி அதே ஊரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கிறார். தவிர, வீட்டு வாடகை மூலம் 9,000 ரூபாய் வருகிறது.
''குடும்பச் செலவுகள், வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., சேமிப்பு எல்லாம் சேர்த்து இன்றைய நிலையில் 25,100 ரூபாய் செலவாகிறது. மீதமிருக்கும் 43,900 ரூபாயிலிருந்து மகன் ரித்திஸ்ராமின் கல்விக்கும் கல்யாணத்துக்கும் தேவைப்படும் தொகையைச் சேர்க்க முதலீடு செய்ய வேண்டும். கோவையில் இன்னும் ஐந்து வருடத்தில் முப்பது லட்ச ரூபாயில் வீடு வாங்க வேண்டும். உறவினர்களிடம் வாங்கி இருக்கும் கடன்  (வட்டியில்லை) நான்கு லட்ச ரூபாயை ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்திய கார் ஒன்றை வாங்க வேண்டும். இதுபோக ஓய்வு காலத்தில் மாதம் 20,000 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்'' என்றவர்களுக்கு, நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
''எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையில் வேலைக்குச் சென்று உற்சாகமாக சம்பாதிக்கும் தினேஷ்-விஜி தம்பதியினர் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து வருவது சிறப்பான விஷயம். வருமானம் நிறையவே இருப்பதால் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எந்த ஃபண்டில், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்...
இன்ஷூரன்ஸ்!
தம்பதிகள் இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்து வருவதால் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். தினேஷ் குமார் 60 லட்ச ரூபாய்க்கும், விஜி 26 லட்ச ரூபாய்க்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம். இருவருக்குமான பாலிசிக்கு வருட பிரீமியம் 18,000 ரூபாய்தான் கட்ட வேண்டிவரும்.
இந்த டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைக் கட்ட தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பட்சத்தில், இவர் ஏற்கெனவே இரண்டு எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார். இந்த பாலிசிகளினால் கிடைக்கக் கூடிய குறைவான கவரேஜுக்காக வருடம் ஒன்றிற்கு 17,600 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். எனவே இந்த பாலிசிகளின் மூலம் எந்தவொரு பிரயோஜனமும் இவருக்கு இல்லை என்பதால் இதை உடனே சரண்டர் செய்வது நல்லது.
இதுவரை இதற்காக கட்டி வந்த பிரீமியம் தொகையை இனிமேல் டேர்ம் இன்ஷூரன்ஷூக்கான பிரீமியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஐந்து லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் (ஃப்ளோட்டர் பாலிசி) எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு ஆண்டு பிரீமியம் 10,300 ரூபாய் கட்ட வேண்டிவரும்.  இதற்கான பிரீமியத்திற்கு எதிர்கால முதலீட்டிற்காக மீதமிருக்கும் தொகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கல்விக்கு..!
மகனை பி.இ. படிக்க வைக்க இன்னும் 14 வருடம் கழித்து 17 லட்சம் ரூபாய் தேவை.  இதற்காக மாதம் 3,000 ரூபாயை ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் இப்போதே முதலீடு செய்ய ஆரம்பித்துவிடலாம். கிடைக்கக்கூடிய 17 லட்ச ரூபாய் வருமானத்தை பயன்படுத்தி ரித்திஸ்ராமை நல்ல கல்லூரியில் படிக்க வைக்கலாம்.
கல்யாணத்துக்கு..!
மகனுக்கு 25 வயதில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். இன்னும் 22 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய குறைந்தது 25 லட்சம் ரூபாய் தேவை. அதனால் இப்போதே மாதம் 1,000 ரூபாயை
15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு 22 ஆண்டுகள் தொடர்ந்தால் சுமார் 20.45 லட்ச ரூபாய் கிடைக்கும்.
படிப்புக்கான முதலீடு 14 ஆண்டுகளில் முடிந்துவிடும். அதன்பிறகு அதற்காக செய்துவந்த 3,000 ரூபாயை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் கல்யாணத்துக்காக முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டிலிருந்து கிடைக்கக்கூடிய 5.58 லட்ச ரூபாயையும் சேர்த்து கிடைக்கும் 26 லட்ச ரூபாயை பயன்படுத்தி மகனின் திருமணத்தை அமர்க்களமாக நடத்தி முடிக்கலாம்.

கார் வாங்க..!
இன்னும் இரண்டு வருடத்தில் பழைய கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்கு 1.5 லட்சம் ரூபாய் தேவை என்று சொன்னார்.
இன்றிலிருந்து மாதம் 6,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். கிடைக்கக்கூடிய 1.6 லட்ச ரூபாயை பயன்படுத்தி நல்ல தரமான பழைய காரை வாங்கிக் கொள்ளலாம்.
வீடு வாங்க..!
இன்னும் 5 வருடத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்கிறார். வீடு என்பது குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட முடியாது என்பதால், மேலே சொன்ன எதிர்கால முதலீட்டிற்குப் போக மீதமிருக்கும் 22,000 ரூபாயை எடுத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 19.73 லட்ச ரூபாய் கிடைக்கும். 
உறவினர்களிடமிருந்து வாங்கியிருக்கும் வட்டியில்லா கடன் நான்கு லட்ச ரூபாயை ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பித் தரவேண்டும் என்கிறார். அதனால் இன்றிலிருந்து மாதம் 8,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்துவந்தால் 6.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக் கூடிய மொத்த தொகை சுமார் 26.33 லட்ச ரூபாய்.
இன்றைய ரியல் எஸ்டேட் விலை நிலவரத்தை வைத்து பார்க்கும்போது கோவை நகரத்தில் இன்று 30 லட்சம் ரூபாய் விலை கொண்ட ஃபிளாட்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து 40 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் மேலே சொன்ன மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய 26.33 லட்சத்திலிருந்து நான்கு லட்சம் ரூபாயை எடுத்து உறவினர்களிடமிருந்து வாங்கியிருக்கும் கடனை அடைத்துவிட்டு மீதமிருக்கும் 22.33 லட்சம் ரூபாயை வீடு வாங்க முன்பணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீதி தேவைப்படும் 17.67 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக மாதம் அதிகபட்சமாக 22,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டியிருக்கும். இந்த பணத்திற்கு என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. இதுவரை வீடு வாங்க முன்பணத்துக்காக முதலீடு செய்து வந்த 22,000 ரூபாயை இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம்.  

ஓய்வுகாலத்திற்கு..!
தனது 55-வது வயதில் ஓய்வுபெற விரும்புகிறார் தினேஷ்.  ஓய்வு காலத்திற்குப் பிறகு மாதம் 80,000 வருமானம் இருந்தால்தான் இன்றுபோல் அன்றும் செலவு செய்து சிறப்பாக வாழ முடியும்.
அதற்காக மாதம் 6,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை இரு ஆண்டுகள் கழித்து காருக்காகச் செய்து வந்த முதலீடு முடிந்ததும் ஆரம்பிக்கலாம். 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 21 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கிடைக்கக்கூடிய தொகை 1.05 கோடி ரூபாய். இதை ரிஸ்க் இல்லாத முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் 80,000 ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு ஓய்வுகாலத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
பங்குகளிலும் முதலீடு செய்யலாம்!
இவரது எல்லாத் தேவைகளையும் மேலே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளின்படி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதனால் ஏற்கெனவே செய்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை நிறுத்திவிடலாம். பின்னர், அதில் முதலீடு செய்து வந்த 4,000 ரூபாயை பேங்க் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடு நீண்ட காலம் தொடர்ந்தால் பிற்காலத்தில் அந்த பங்குகளின் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. செழிப்புடன் வாழ வாழ்த்துகள்!

Sunday, 8 January 2012

My Fourth Financial Planning Article in Naanayam Vikatan 8th January 2012


நேற்று... இன்று... நாளை! 
 
குடும்ப நிதி ஆலோசனை
சாதாரண மனிதர்கள் முதல் மெத்தப்படித்தவர்கள் வரை எல்லோருக்கும் குடும்ப நிதித் திட்டமிடல் கட்டாயம் தேவை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பத்ரிநாராயணன். தனியார் கல்லூரி பேராசிரியரான இவரது வருமானம் பிடித்தம் போக 27,750 ரூபாய். மனைவி துர்காபாய் குடும்பத்தலைவி. மகன் பாலகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது மாத சம்பளம் பிடித்தம் போக 10,400 ரூபாய். ஆக தந்தையும், மகனுமாக சேர்த்து மாதம் 38,150 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். இது போக வீட்டு வாடகை மூலம் மாதம் 2,000 ரூபாய் கிடைக்கிறது.
''வீட்டுச் செலவு, என் பெற்றோருக்கு தருகிற பணம், மகனுக்கு ஆகும் செலவுன்னு மாசம் 19,350 ரூபாய் செலவாகுது. இதுபோக ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு மாதம் 4,400 ரூபாய் போயிடுது. குடும்பத் தேவைக்காக வங்கியில் வாங்கியிருந்த 1.41 லட்சம் ரூபாய் பெர்சனல் லோனுக்கு மாசத்திற்கு 5,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றேன்.  இதெல்லாம் மிஞ்சி நிக்கிற பணத்துல வீடு வாசல் வாங்கி, என் பையனோட எதிர்காலத்துக்கும், என் ஓய்வுகாலத்துக்கும் பிளான் பண்ணனும். அதுக்கு நீங்கதான் வழி சொல்லணும்!'' என்றார் பத்ரி நாராயணன்.
அவர் தந்த விவரங்களை வைத்து குடும்ப நிதி ஆலோசனை தந்தார்  நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.

என்ன செய்யவேண்டும்?
''எல்லா செலவுகளும் போக, எதிர்கால முதலீட்டுக்காக 6,425 ரூபாய் இருக்கிறது. இதை வைத்து இவருடைய எல்லா எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. அதனால் ஆரம்பித்து ஒரு மாதமேயான இரண்டு சீட்டையும் நிறுத்திவிடுவது நல்லது. இதனால் சீட்டுக்காக மாதம் செலுத்தும் 5,000 ரூபாய் மிச்சமாகும்.
கிராமிய போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை தன் பெயரிலும், மனைவி பெயரிலும் எடுத்து வைத்திருக்கிறார். இந்த இரண்டு பாலிசிகளுக்காக மட்டுமே வருடம் 24,000 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். 2034-ல் கிடைக்கக்கூடிய 6 லட்சம் ரூபாய்க்காக இவ்வளவு மெனக்கெடத் தேவையில்லை.  அதனால் இதில் ஒரு பாலிசியை உடனே சரண்டர் செய்துவிடலாம். இதனால் மாதம் 1,000 ரூபாய் மீதமாகும்.
இது தவிர, லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் எண்டோவ்மென்ட் பாலிசி, ஜீவன் ஆனந்த், மணிபேக் மற்றும் பீமா கோல்டு பாலிசிகளை சரண்டர் செய்துவிடலாம். இதனாலும் மாதம் 2,200 ரூபாய் வரை மிச்சமாகும். இதெல்லாம் சேர்த்தால் பத்ரிநாராயணனிடம் மொத்தம் 14,600 ரூபாய் இருக்கும்.
இனி இவர் 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். இதற்கு வருடம் 11,600 ரூபாய் பிரீமியம் கட்டவேண்டும். இதுபோக குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேர்த்து 3 லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஆண்டு பிரீமியம் 6,400 ரூபாய்.!

கல்யாணத்துக்கான முதலீடு..!
* மகன் பாலகுமாரின் கல்யாணச் செலவுக்கு 3 லட்சம் ரூபாய் தேவை. இதற்கு இப்போதிருந்தே 3 ஆண்டு களுக்கு மாதம் 7,000 ரூபாய் வீதம் 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்க!
மகனுக்கு சென்னையில் வீடு கட்டித்தர ஆசைப்படுகிறார். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வீடு வாங்க 28 லட்சம் ரூபாய் ஆகும். அதனால் மாதம் 2,250 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்யவேண்டும். இதன் மூலம் 3.62 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சில செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளார். இன்றைய நிலையில் அந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் 80,000 ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை குறைக்க இந்த பணத்தை எடுத்து ஈக்விட்டி டைவர்சிஃபைட் வகையில் மறுமுதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகள் கழித்து வருமானம் 1.60 லட்சம் கிடைக்கும். இந்த இரண்டையும் சேர்த்தால் கிடைக்கும் 5.22 லட்சம் ரூபாயை வீடு வாங்க முன்பணத் தொகைக்கு பயன்படுத்திக் கொண்டு, மீதிப் பணத்தை வங்கியில் கடனாக வாங்கலாம். தந்தை, மகன் சம்பளம் உயர உயர, இ.எம்.ஐ.யை எளிதாக கட்டிக் கொள்ளலாம்.
ஓய்வுகாலத்திற்கு...!
பத்ரிநாராயணனுக்கும் அவர் மனைவிக்கும்  ஓய்வு காலத்தில் நல்லபடியாக இருக்க 40,000 ரூபாய் தேவை. இதற்கு இன்றிலிருந்து ஓய்வுகாலம் வரை மாதம் 3,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும். ஏற்கெனவே உள்ள கடன், மார்ச் 2013-ல் முடிவதால், அதற்காக கட்டி வந்த இ.எம்.ஐ. தொகை 5,000 ரூபாயை அன்றிலிருந்து, 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இந்த இரு முதலீடுகளும் முடியும் போது கிடைக்கும் வருமானம் 48.90 லட்ச ரூபாய் கிடைக்கும். இதை ரிஸ்க் இல்லாத முதலீட்டுக்கு மாற்றினால் ஓய்வுகாலத்தில் மாதம் 40,000 ரூபாய் கிடைக்கும். நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!''
-செ.கார்த்திகேயன்,