Pages

Tuesday, 5 November 2013

Retirement Planning - My 6th Article in The Hindu dated on 5th November 2013



ஓய்வுக் கால திட்டமிடல் - பி. பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01642/pension_jpg_1642423h.jpg

இன்று நம்மில் பலர் தனியார் நிறுவனங்களில் தான் வேலை செய்கிறோம். எனவே நமக்கு ஓய்வூதியம் (பென்ஷன்) கிடையாது, அரசாங்க வேலையிலும் கூட 2004 எப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இன்று நாம் கூட்டுக் குடும்பங்களில் இருந்து விலகி தனித் தனி தீவாகி விட்டோம். இதனால் தனி மனித செலவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அரசாங்கத்தில் ஒருவருடைய சம்பளத்தில் 10% மாதா மாதம் பிடித்து 30 முதல் 35 வருட முடிவின் பிறகு கொடுக்கப்படக்கூடிய தொகையே பென்ஷன் ஆகும். 10 வருடங்களுக்கு முன்பு போதுமானதாக இருந்தது காரணம் அனைவரும் தேவைக்கு ஏற்ப செலவு செய்தார்கள். ஆனால் தற்பொழுது விருப்பம் மற்றும் மற்றவர் நம்மை பற்றி ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ என்று செலவு செய்வதால் அந்த பணம் போதுமானதாக இருப்பதில்லை.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பென்ஷன் இல்லாததை சாபம் என்று நினைக்கிறார்கள். இதை அவர்கள் நினைத்தால் வரமாக மாற்ற முடியும். சாபமோ வரமோ அது நம்முடைய அணுகுமுறையில் தான் இருக்கிறது.
இன்று வேலைக்கு சேர்பவர்களின் சராசரி வருமானம் ரூபாய் 20,000. இதில் 10%, அதாவது மாதம் 2000 சேமிப்பதற்கு எடுத்துக்கொண்டால் இது 30 வருடங்களில் ஒரு கோடியே நாற்பது லட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபாய், நாம் 15% கூட்டு வட்டி என எடுத்துக்கொண்டால்.
சென்செக்ஸ் கடந்த 34 வருடங்களாக இருக்கிறது 1979-80ம் ஆண்டு 100 புள்ளியில் ஆரம்பித்தது என்று 21,164 புள்ளிகள் அதாவது 17% கூட்டு வட்டி. ஈக்விட்டி திட்டங்கள் நிறைய பலனை தான் கொடுத்திருக்கின்றன.
ஈக்விட்டி என்பது ஒரு பிசினஸ், அது பலன் தர 5 முதல் 10 ஆண்டு வரை கூட ஆகும் எனவே பொறுத்திருப்பது நல்லது அதை விட்டு விட்டு அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தால் நமக்கு மன அழுத்தம் தான் உண்டாகும். நிறைய பேர் இதை தவறாக புரிந்து கொண்டு இது ஒரு சூதாட்டம் மேலும் நமக்கு நிறைய இழப்பு தான் வரும் என்று நினைக்கிறார்கள்.
ஈக்விட்டி அனைத்து நாடுகளிலும் நல்ல பயனையே தந்திருக்கிறது நீண்ட கால அடிப்படையில். பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு முதலீடாகும். ஒரு போதும் 2 ஆண்டில் பணம் இரு மடங்காகும் என்று சொல்லவில்லை, அதே சமயம் 10 ஆண்டு கால அடிப்படையில் டைவர்சிபைட் பண்ட் நல்ல பலனையே தந்திருக்கிறது.
மருத்துவத்தின் வளர்ச்சியினால் இன்று 35 முதல் 40 வயது உள்ளவர்கள் 80 வயது வரை வாழ வாய்ப்புள்ளது. அதே சமயம் பெரும்பாலோர் சீக்கிரமாகவே ஓய்வு பெற விரும்புகிறார்கள் 50 முதல் 55 வயதிற்குள்ளாகவே.
இதனால் 25 முதல் 30 வயது வரை ஓய்வு பெற்ற பின்பு எந்தவித சம்பாத்தியம் இல்லாமலோ அல்லது குறைந்த சம்பாத்தியத்திலோ காலத்தை ஓட்டவேண்டும். இன்றே நிறைய முதியோர் இல்லங்கள் வந்துவிட்டன. ஜெனரேஷன் இடைவெளி என்பது போக போக அதிகமாக வாய்ப்பு இருப்பதாலும் நமக்காக ஒரு தொகை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது.
நிறைய பேர் ரிடையர் ஆனவுடன் எல்லா பணத்தையும் பாதுகாப்பு கருதி பிக்ஸட் டெபாசிட் மற்றும் போஸ்ட் ஆபீசிலும் முதலீடு செய்கிறார்கள். அவர்களுடைய எல்லா பணமும் உடனடியாக தேவைப்படாது. அந்த மாதிரி உள்ள பணத்தை பேலன்சடு MF ல் போடுவது நல்லது. அது 6 ஆண்டுகளில் இரு மடங்கு ஆவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தற்பொழுது உள்ள நிலைமை மிகவும் பிரகாசமாக இருக்கிறது. அவ்வாறு செய்வதால் நம்மால் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதோடு கொஞ்சம் வருங்கால சந்ததிக்கும் விட்டு செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
ஒரு சினிமா பார்க்க மற்றும் ஒரு சுற்றுலா சென்று வர நாம் நிறைய பிளான் செய்கிறோம், ஆனால் நம்முடைய வாழ்க்கை என்று வரும்போது நாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறோம். சம்பாதிப்பது எப்படி ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சம்பாதித்த பணத்தை சரியான வழியில் முதலீடு செய்வதும் முக்கியமாகும்.
ரிடயர்மெண்டுக்கு பிளான் செய்யும்போது அவரவர் ரிஸ்க்-குக்கு ஏற்ப 20:20:10:30:20 என பாங்க்:போஸ்ட் ஆபீஸ்: சேவிங்க்ஸ்: பேலன்டு ஈக்விட்டி என பிரித்துக்கொள்ளலாம். ரிஸ்க்-குக்கு தக்கவாறு இந்த சதவீதத்தை கூடவோ குறைத்தோ மாற்றிக்கொள்ளலாம்.
வேலைக்கு சேர்ந்த உடனே ரிடயர்மென்ட் பிளான் செய்தால் முதலீடும் குறைவு, நல்ல தொகை கிடைப்பது உறுதி. இன்றைய இளைஞர்கள் சம்பாத்தியம் - செலவு = சேமிப்பு என்று பின்பற்றுகிறார்கள். இதில் ஒரு சின்ன திருத்தம் செய்தால் எல்லாம் சரியாகி விடும். அதாவது சம்பாத்தியம் - சேமிப்பு = செலவு என மாற்றினால் நம்முடைய ரிடயர்மென்ட் வாழ்க்கை வாழ்வதேற்கே! இல்லாவிடில் அதை நினைத்து பயந்துகொண்டே இருக்கவேண்டும்.
நாம் ஏன் பணமாகவே வைத்துக்கொள்ள வில்லை என்றால் அதற்கு மதிப்பு குறைவு எனவே ஒரு ரியல் எஸ்டேட், ஈக்விட்டி, பாங்க் மற்றும் போஸ்ட் ஆபீஸ் முதலியவற்றில் முதலீடு செய்கிறோம். அவ்வாறு செய்யும்போது நம்முடைய ரிஸ்க் என்ன அதனுடைய ரிடர்ன் என்ன என்று இணைய தளத்தில் கொஞ்சம் அலசி, ஒரு முகவருக்கு இரண்டு பேரிடம் விசாரித்த பின்பு முதலீடு செய்வது நல்லது. பிளான் செய்வதை பற்றி மிகவும் அற்புதமான ஒரு வரி உண்டு. வெற்றிக்கு பிளான் செய்ய தவறுபவர்கள் எல்லோரும் தானாகவே தோல்விக்கு தயார் செய்கிறார்கள் என்பதே. நல்ல வாழ்க்கைக்கு தயார் செய்வோம் நன்றாக வாழ்வோம்.
பி.பத்மநாபன் - padhu73@gmail.com

No comments:

Post a Comment