குழந்தைகளின் கல்வியும்
பெற்றொர்களின் முதலீடும் - பி.பத்மநாபன்
ஒருவருக்கு
என்றும் அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றசெல்வம்
எல்லாம் உயர்ந்தது அல்ல என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னது. பலர் தம்
வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியைத் தனது குழந்தைகளின்
கல்விக்காக செலவிடுவதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.
இதை
புரிந்து கொண்டதால்தானோ என்னவோ இன்று கல்வி நல்ல வியாபாரமாகிவிட்டது.படிக்காத பலர்
இன்று பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள் அதில் பல படித்தவர்கள்
ஆசிரியர்களாக இருக்கிறார்கள்! கல்வியின் பேரில் என்ன சொன்னாலும்பெற்றோர்கள் பணத்தை
செலவிடுவதற்குத் தயங்குவது இல்லை.
ஒருவரின்
வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் கல்வியாக நம்பப்படுவது மருத்துவம் மற்றும்
பொறியியல் போன்ற தொழில் சார்ந்த துறைகளே. முந்தைய காலங்களில் கல்வி நிறுவனங்கள்
பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் சேவை நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்ததால், தரமான
கல்வி, சேவை நோக்குடன் வழங்கப்பட்டு வந்தது. மேலும்குறைவான கல்வி நிறுவனங்கள்
இருந்ததால் நிறைய திறமைசாலிகள் உருவானார்கள்.
இன்று
கல்வி வியாபாரமாகி விட்டபடியால் நிறைய பொறியியல் பட்டதாரிகள்இருக்கிறார்கள் ஆனால்
அவர்களுக்கு நடைமுறை பயிற்சி இல்லாததால் கஷ்டப்படுகிறார்கள்.
பாசமுள்ள
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த கல்வியே அளிக்க விரும்புவீர்கள்.
உங்கள் குழந்தையின் கல்வியின் கனவை நினைவாக்க மற்றும் பாதுகாப்பான அவர்களின்
எதிர்காலத்திற்கு பொருளாதாரத் திட்டமிடுதல் மிக மிகஅவசியமானது.
வாழ்க்கைத்
தரம் உயர்ந்து வருவதற்கேற்ப, உங்கள் குழந்தையின் கல்விக்கான செலவுகளும்
அதிகரிக்கிறது. முன்னதாகவே உங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்காக திட்டமிட அல்லது
சேமிக்க பெரும்பாலோர் செய்யும் ஒரு தவறான காரியம் குழந்தை பிறந்தவுடன் ஒரு
இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது தான். அவர்களை பொறுத்தவரை அந்தபணம் அவர்களது
குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு உதவும் என்பது தான். அது கொஞ்சம்கூட பத்தாது
என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தாத்தா,
பாட்டி பெரும்பாலும் தன்னுடைய பேரன் மற்றும் பேத்திக்கு எதாவது செய்யவேண்டும் என
விரும்பி இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள் அல்லது வைப்பு நிதியில் பணம்போடுவார்கள்.
நீண்ட
கால அடிப்படையில் அந்த பணம் தேவைப்படுவதால் அதை மியூச்சுவல் பண்டு திட்டங்களில்
சேமிப்பது நல்லது அல்லது நல்ல ஷேர் வாங்கினால் அது பிற்காலத்தில் கை கொடுக்கும்.
விலை குறைவாக கிடைக்கும் தருணத்தில் ஒருபிளாட்டை வாங்கினாலும் நல்லது.
முன்பு
4 அல்லது 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கூட பெற்றோர்கள் குழந்தைகளின்
படிப்பிற்காக நேரம் ஒதுக்கி தனிப்பட்ட கவனம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைய
பெற்றோர்கள் பொருள் ஈட்டுவதிலேயே கவனம் கொள்வதால் சரிவர குழந்தைகளின் படிப்பில்
கவனம் செலுத்தமுடிவதில்லை மேலும் இன்று 2 குழந்தைகள் தான்அதிகப்படியாக உள்ளது.
அதிக பொருள் ஈட்டுவதால் அதிக கல்விக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்க்கவேண்டும்
என்ற மனப்பான்மையும் உள்ளது. இதற்காக குழந்தைகள் ஒரு மணி நேரம் பிரயாணத்திலேயே
செலவிட நேரிடுகிறது.
குழந்தைகளின்
கல்விக்கு என சேமிக்கும்பொழுது இன்றைய கல்விக்கான செலவு என்ன அது 8% பணவீக்கத்தில்
எவ்வளவு பிற்காலத்தில் என்று கண்டு கொண்டால் நமக்குஅதற்கான தொகை தெரிந்து விடும்.
உதாரணமாக குழந்தைகளின் கல்வி நீண்ட காலஅடிப்படையில் இருப்பதால் நாம் இன்சூரன்சை
தவிர்ப்பது நல்லது. இன்று ஒரு குழந்தை பொறியியல் படிக்க குறைந்தது 6 லட்சம் 4
ஆண்டுகளில்தேவைப்படும். இதே படிப்பு இன்னும் 18 வருடத்தில் ஏறக்குறைய 24 லட்சம்
தேவைப்படும்.மாதம் 3 ஆயிரம் சேமித்தால் 18 வருடங்களில் அதை அடைந்து விட முடியும்.
அதற்கு நாம் இன்றிலிருந்தே பிளான் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
ஆனால்
இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்கவேபெரிதும்
விரும்புகிறார்கள். இன்று அதற்காக ஆகக் கூடிய செலவு குறைந்தது 25 லட்சம்
2வருடத்திற்கான தொகை. இந்த பணம் 8% பண வீக்கத்தில் இன்னும் 18 வருடங்களில் 1கோடி
ஆகும்!
குழந்தை
பிறந்தவுடன் 9 ஆயிரம் மாதா மாதம் சேமிக்க தொடங்கினால் அவர்கள் 18வருடத்தில் 15%
கூட்டு வட்டியில் ஒரு கோடியை எளிதாக அடைந்து விடலாம். நீங்கள்வெளிநாட்டில் படிக்க
வைக்க விரும்பினால் மட்டுமே. உள்ளுரில் படிப்பதற்கு 40 லட்சம் மட்டுமே தேவைப்படும்
அதற்கு மாதம் 4 ஆயிரம் சேமித்தால் போதுமானது.
இன்று
பெரும்பாலோர் ஓரிடத்தில் வேலை செய்வதால் ஒரே சமயத்தில் முதலீடு செய்யமுடியாது
ஆனால் எல்லோராலும் மாதா மாதம் ஒரு தொகையை சேமிக்கமுடியும். அந்தவகையில்
மியூச்சுவல் பண்டு பயனுள்ளதாக இருக்கிறது. SIP முறையில் ஒருவரால் எளிதாக சேமிக்க
முடிகிறது மேலும் நம்முடைய சம்பள உயர்விற்கேற்ப வருட வருடம் SIPதொகையை
அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
RULE 72
ஒரு
முதலீடு இரண்டு மடங்கு ஆகவேண்டும் என்றால் நமக்கு கிடைக்கும் வட்டியை 72ல்
வகுத்தால் கிடைக்க கூடிய எண் எத்தனை ஆண்டு என்பதை குறிக்கும் அதே போல வருடத்தை
72ல் வகுத்தால் கிடைக்க கூடியது வட்டி ஆகும்.
உதாரணமாக
ஒருவருக்கு 8% வட்டி கிடைத்தால் அவருடைய பணம் 9 ஆண்டுகளில்இரட்டிப்பாகும். 72/8=9
வருடம். அதே போல ஒருவருக்கு 6 வருடத்தில் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்றால்
அவருக்கு 12% வட்டி கிடைக்க வேண்டும். அதாவது 72/6=12% வட்டி.
நமது
பணவீக்கம் 8% என்று எடுத்துக்கொண்டால் ஒருவருக்கு குழந்தை பிறந்ததில் இருந்து18
வருடத்தில் என்றைய கல்வியின் மதிப்பு 4 மடங்கு ஆகி விடும்.
கல்விக்கான
முதலீட்டை தேர்ந்தேடுக்கும்பொழுது அந்த முதலீடு நம்முடைய இலக்கை அடைய உதவுமா,
அதில் என்ன ரிஸ்க், குறைந்த கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா முதலியவற்றை
பற்றி அறிந்து செயல் பட வேண்டும். அதை விடுத்து அந்த முகவர் சொன்னார் இவ்வளவு
கிடைக்கும் அவ்வளவு கிடைக்கும் என்று செய்தால் நாம் நம்முடைய குறிக்கோளை அடைய
முடியாது.
பி.பத்மநாபன்
- padhu73@gmail.com
No comments:
Post a Comment