Pages

Saturday, 29 June 2013

What is Long Term Investments? and What to Look for? - Explained with Data Points!

Recently, I got the SENSEX data since inception, and I tweak the data to derive some logical assumptions about the returns in the long term investments. I tried my level best to put it in a simple language so that everyone will easily understand!

The past data may or may not guarantee future returns, I completely agree. But, past data will always tell us where we are heading; the quantum might vary but history repeat itself.

The purpose of this analysis is how one should look at investment in a long term, to really amass wealth. Patience Pays! Since, it is difficult to control emotions, only very few people are making money by investing long term. Others will start bad mouthing, about the fluctuation of the market and eventually will not be part of the entire journey.

In the 34 years of Sensex (Excludes Divided Yield of the Stock around 2% average) only 12 times it has given negative returns as far as one year rolling returns are concerned. The lowest return will be -46.77%, whereas the highest return in one year will be whopping 267%.

If you look out the entire data, it always FELL less than it RISES throughout the period!

In case of 3 years rolling returns, it comes down to 6 times of negative return, the lowest will be -15.21%, whereas the highest will be 81.73%.

In case of 5 years rolling returns, it comes further down to 3 times of negative return, the lowest will be -4.77%, and the highest will be 53.7%.

In case of 7 years, it is 2 times and the lowest will be -1.92%, and the highest will be 42.79%. If we add the dividend yield there will not be any negative returns at all.

In case of 10 years, it is only 1 time and the lowest will be -2.09%, and highest will be 34.69%. If we add the dividend yield there will not be any negative returns at all.

For the period of 12, 15 and 20 years, there will be absolutely no negative return.

More Data to Ponder!

1. Sensex is a diversified large cap, so I have taken a fund which is a large cap (Benchmark Sensex) and it is there for nearly 20 years (Franklin India Blue chip Fund). I have taken a SIP returns for the 3 years in the above table which gives 4.01% CAGR, if  it is in a systematic investment method against the worst Sensex rolling return which is negative (-15.21% return).

2. For 5 year SIP returns 1.73% CAGR, as against -4.77% returns in Sensex.

3. For 7 Year SIP returns 6.09% CAGR, as against -1.41% returns in Sensex.

4. The biggest surprise even to me is for 10 year SIP returns comes to 17.22% CAGR, whereas the Sensex has delivered 3.99% in the same period. It clearly conveys one thing, irrespective of the market situation, (even at lower interest of 3.99% CAGR), long term SIP delivered substantial returns!

5. Indian Equity markets allow the fund managers to create more alpha against the bench mark of the scheme it is intended for.

Biggest Challenges!

The biggest challenge for equity mutual fund is the mindset of the individual. Whatever the data I have shown is Investment Return not an Investor Return (Very few percentage of the investor really understands and reaps the benefits). The effort I am making here is to match investment return to investor return, in the next 10 years or so.

1. It is highly difficult to be not emotional over our investments in the long term. But, will it be worth waiting? The answer is definitely YES. It is in our mindset only. When an individual can wait endlessly (20 years plus) for insurance and property investments, why not for equity mutual fund investments? Which is time tested and proven, not a speculative or low return investments!

2. To my surprise, most of our goals are long term in nature, so we can comfortably set aside some portion of the money for future goals and wait patiently.

3. In case of Govt. employee the biggest plus to pursue the career is Pension. In that, they deduct roughly 10% of their basic pay and save in a debt fund for 30 plus years. Even though it gives less return, because of 30 years compounding, it seems to be a huge sum.

4. Today, most of us are not working in a govt., so they don't have the pension. Yet we can create much bigger pension than what Govt. employee gets, if and only if, we could set aside some portion for a longer duration.

5. All the fixed instrument were okay, for the previous generation; Where they got more interest from their safe investment and less life style needs and don't have the opportunity to diversify also. Today, we have to match our lesser interest rate and ever expanding life style needs. We have no other go than grabbing this opportunity, by investing in these kinds of instruments.

It is after all one life to live, we keep investing in a fixed instrument, believe that it will be safe and without knowing the silent killer (INFLATION!) and bankrupt over a period. The best way to address this issue is to take some well calculated risk and live peacefully. We can leave some estate to our loved ones too.

Opportunities are never lost; somebody has taken over it, those we MISS!

Hope this article helps you to understand better about long term investments than ever before.

p.s. Welcome your Feedback!


Click Here for Excel Workings

Monday, 17 June 2013

Is PPF Really a Good Investment, Compared to Volatile ELSS, Find Out!!!

Today, most of the individual still believes that PPF is one of the best TAX saving instrument and religiously put their money, the moment the new financial years starts and never ever worried about the interest rate or withdrawing money immediately. They mentally lock themselves for the next 15 years for the following reasons...

1. Currently 8.7% is tax free after 15 years! It will not be the same in the 15 years.
2. Some money should be in a safe investment irrespective of the longggggg tenure!
3. If they are in 30% tax bracket, the rate of return will be over 12%, without understanding what the future needs will be!!!
Somehow, my mind will never ever accept any fixed instrument for more than 5 years. I keep telling my friends and my investor that does not put money in a PPF, but hardly anyone listen to my advice.

If something can be put it in illustration at least some people will understand how PPF is not a suitable product after 15 years. This is one such initiative to put the numbers in place.

I will explain you two scenarios

Scenario 1

One of the investor invested Rs. 8,000 per month which amounts to Rs. 96,000 per annum in PPF and I assume 11.58% (to match the same amount in both illustration I derived this percentage for PPF) interest and the total investment is Rs. 13,68,000 and the final value is Rs. 34,87,612 and instead of 180 months I have taken 171 months because of the ELSS fund, I have compared is only 171 months old.

Suppose the same money is invested in ELSS fund the value would become Rs. 67,87,516 for the same investment which produces 18.66% CAGR.

Both the money is tax free and the difference only 33 Lakhs!

Scenario 2

In the 2 scenario one individual is invested only for the first 3 years and from 37th month onwards he is withdrawing 8K and put it back to earn tax exemption. Taking 8K and putting back 8k in other words further contribution is stopped and the first 3 years contribution is allowed to grow. Hope I made it clear.

Here, the investor got tax exemption for all the 171 months whereas his investment was only Rs 2,88,000 and the return would be the same Rs. 34,87,452.

Whereas in the PPF the investment is Rs. 13,68,000 and the same return of Rs. 34,87,612.

For Rs. 96,000 the tax exemption will be Rs. 19,200. For 15 Years it would be 15*19,200=2,88,000. In other words, you will get 100% tax exemption of your investment along with great returns!

Saturday, 15 June 2013

My Challenging Financial Planning Appeared in Today's Naanayam Vikatan Dated 16/6/2013

 
ஒரு குடும்பத்தின் வரவு, செலவுக் கணக்குகளை ஆராய்ந்து, நிதித் திட்டமிடல் செய்ய அதிகபட்சம் ஒரு வார காலத்துக்கு மேல் எனக்கு தேவைப்படாது. ஆனால், ஓராண்டு காலம் உழைத்து ஒரு குடும்பத்துக்கு நிதித் திட்டமிடல் செய்யவேண்டிய சவால் எனக்கும் வரவே செய்தது.

மூன்று வருடங்களுக்கு முன்பு பரத் - சுசீலாவைச் சந்தித்தேன். இருவரும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளஞ்ஜோடிகள். ஹரிணி, துளசி என அவர் களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.  இருவரின் மாதச் சம்பளத்தையும் சேர்த்தால், சுமார் 2.60 லட்சம் ரூபாய். இவ்வளவு பணம் சம்பாதிக்கும் ஒரு குடும்பத்துக்கு நான் நிதி ஆலோசனை தந்ததில்லை என்பது நான் அடைந்த முதல் இன்ப அதிர்ச்சி. இவ்வளவு சம்பாதித்தும் அவர்களின் மொத்தச் சேமிப்பு வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் என்று தெரிந்துகொண்டபோது, எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அவர்களின் செலவுப் பட்டியலை விலாவாரியாகப் போட்டபோதுதான் தெரிந்தது, அவர்கள் ஓட்டை பக்கெட்டில் தண்ணீர் நிரப்புகிறார்கள் என்று.

அவர்களின் குடும்பச் செலவை கொஞ்சம் பாருங்களேன். வீட்டு வாடகை - ரூ.27,500; லைஃப் இன்ஷூரன்ஸ் (6 பாலிசிகள்) - ரூ.47,500; ஸ்கூல் ஃபீஸ் - ரூ.8,000; குடும்பச் செலவுகள் - ரூ.22,000; குழந்தைகளுக்கான பாட்டு, நடனப் பயிற்சிக்கு - ரூ.10,000; கார் லோன்(2) - ரூ.20,000; வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. (1) - ரூ.46,000; வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. (2) - ரூ. 22,000; டிரைவர் சம்பளம் - ரூ.10,000; சமையல்காரர் சம்பளம்  - ரூ.5,000; உடற்பயிற்சிக்கு - ரூ.3,000; உறவினர்களுக்கு - ரூ.10,000; பெற்றோருக்கு - ரூ.12,000, பெட்ரோல் - ரூ.7,000; ஆக மொத்தம் - ரூ.2,50,000.



இந்தப் பட்டியலைப் போட்டு பார்த்த பிறகுதான், தான் கணக்குவழக்கில்லாமல் செலவு செய்துவருவதை உணர்ந்தார் பரத். உங்கள் வருமானம் பத்தாயிரமோ, பத்து லட்சமோ, பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்துங்கள். செலவு நிச்சயம் கட்டுப்படும். பரத்தின் வீட்டு பட்ஜெட்டை போட்டபிறகு, தேவையில்லாமல் பணம் விழுங்கும் திட்டங்களைக் கழித்துக்கட்ட ஆரம்பித்தேன்.

பாரமாக இருந்த இன்ஷூரன்ஸ்!

கொஞ்சநஞ்சம் அல்ல, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் பிரீமியம் கட்டி வந்தார் பரத். அதுவும், வெறும் 75 லட்சம் லைஃப் கவரேஜுக்காக. இவ்வளவு பணம் கட்டுறீங்களே, இதனால் உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று தெரியுமா?’ என்று கேட்டேன். 'தெரியாது’ என்றார். வரிச் சலுகைக்காக ஆபீஸில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பாலிசியை சிபாரிசு செய்ய, அதை அப்படியே வாங்கி இருக்கிறார் பரத். அந்த பாலிசிகளை எல்லாம் சரண்டர் செய்ய சொல்லிவிட்டு, இரண்டு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொன்னேன். டேர்ம் இன்ஷூரன்ஸில் பணம் திரும்பக் கிடைக்காதே என்றார். ''நீங்கள் கட்டும் சிறிய தொகை உங்களுக்கு திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், இப்போது கட்டும் பணத்துக்கு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ரிட்டர்ன் கிடைக்கும். எஃப்.டி. போன்ற பாதுகாப்பான முதலீட்டில்கூட
9 சதவிகிதம் ரிட்டர்ன் கிடைக்குமே'' எனச் சொல்லி அவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பதற்குள் முழுசாக மூன்று மணி நேரம் போராட வேண்டியிருந்தது.

வேண்டாத வீட்டுக் கடன்!

இரண்டு வீடு வாங்கிய பின்பும் அவர்கள் வாடகை வீட்டில் இருந்தார்கள். இரண்டு வீட்டிற்கும்  அவர்கள் கட்டிய இ.எம்.ஐ. 68,000 ரூபாய். தவிர, வீட்டு வாடகை 27,000 ரூபாய் என ஒரு மாதத்துக்கு 95,000 ரூபாய் வீட்டுக்காக மட்டுமே செலவழித்தார்கள். ஆனால், அந்த இரண்டு வீட்டையும் வாடகைக்கு விட்டதன் மூலம் கிடைத்த வருமானம் வெறும் 23,000 ரூபாய்தான்.

ஆக, வாடகை வருமானத்தைவிட அதிகம் இ.எம்.ஐ. செலுத்தி வந்தார்கள். இத்தனைக்கும், எதற்காக இரண்டு வீடு  வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு அவர்களிடமிருந்து தெளிவான எந்த பதிலும் இல்லை. வருமானம் வருது, இ.எம்.ஐ. கட்ட முடியுமே என்றுதான் வாங்கினார்களாம்.

இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டுக் கடனுக்காக கட்டிவந்த பணத்துக்கு வரிச் சலுகையையும் அவர்கள் க்ளைம் செய்யவில்லை. இனியும் தாமதிக்காதீர்கள். ஒரு வீட்டையாவது விற்றுவிடுங்கள் என்றேன். 60 லட்சத்திற்கு வாங்கி 20 லட்சம் கட்டியபிறகும்கூட அந்த வீட்டை 70 லட்சத்திற்கு மேல் விற்க முடியவில்லை. நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்ததில் ஏழு மாதங்களுக்குப் பிறகு 75 லட்சம் ரூபாய்க்கே  விற்க முடிந்தது. தேவைக்காக வீடு வாங்காமல், பகட்டுக்காக வீடு வாங்கினால், இ.எம்.ஐ. கட்டியே ஓய்ந்து போய்விடுவோம் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

குழந்தைகளுக்கான திட்டங்கள்!

குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பாட்டு மற்றும் நடனப் பயிற்சிக்கு மாதம் 18,000 ரூபாய் செலவு செய்து வந்தார் பரத். ''ஏற்கெனவே நிறைய செலவு செய்வதால், அவர்களின் எதிர்காலம் குறித்து எந்த யோசனையும் இல்லை'' என்றார் பரத். இன்றைய நிலையில் நம்மூரில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கவே 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. இன்னும் பத்து வருடங்களில் 22 லட்சம் ரூபாய் ஆகுமே! அப்போது பணத்துக்கு எங்கு போவீர்கள் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த சேமிப்பை உடனடியாக தொடங்க திட்டம் போட்டுத் தந்தேன். இன்ஷூரன்ஸ் பிரீமியம், இ.எம்.ஐ. பணம் மிச்சமானதை வைத்து அதற்கான திட்டத்தை அமைத்துத் தந்தேன். கூடவே, அவர்களின் ஓய்வுக்காலத்துக்குத் தேவையான பணத்தை எப்படி சேமிப்பது என்பதற்கான திட்டத்தையும் போட்டுத் தந்தேன்.

ஒரு வருடம் தேவைப்பட்டது!

ஏறக்குறைய எனக்கு ஒரு வருடம் ஆனது இந்த நிதித் திட்டமிடலை செய்து முடிக்க. நான் சந்தித்த நபர்களில் அதிகமாக சம்பாத்தியம் கொண்டவரும், பொருளாதார விஷயங்கள் குறித்து துளி அளவுகூட தெரியாதவரும் இவரே. ஆனால், இன்றைக்கு அந்த தம்பதிகள் பணத்தின் அருமையை சரியாகவே உணர்ந்திருக்கிறார்கள். நான் அமைத்துத் தந்த நிதித் திட்டமிடலை சரியாகவே பின்பற்றி வருகிறார்கள்.

Saturday, 8 June 2013

Lump sum Investment Vs Systematic Investment Plan - Which is Best, Find out!!! Appeared in Todays Naanayam Vikatan 9/6/13

எஸ்.ஐ.பி..? சிங்கிள் இன்வெஸ்ட்மென்ட்..?எந்த நேரத்தில், எது சரி?
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது ஒரேநேரத்தில் கையில் இருக்கும் பெருந்தொகையை முதலீடு செய்து வைப்பதா, இல்லை எஸ்.ஐ.பி. முறையில் ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாமா? இப்படி ஒரு சந்தேகம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பலருக்கும் இருக்கவே செய்கிறது.

இந்தக் கேள்விக்கான பதில் ஒன்றல்ல. ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஏற்றபடி மாறும். எவ்வளவு பணத்தை முதலீடு செய்யப்போகிறீர்கள், முதலீட்டின் நோக்கம் என்ன, எவ்வளவு ஆண்டுகளுக்குப் பணத்தை அப்படியே வைத்திருப்பீர்கள் என்கிற கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்து, மேற்சொன்ன கேள்விக்கான பதில் மாறும். ஆனால், ஒரேநேரத்தில் முதலீடோ அல்லது எஸ்.ஐ.பி. முறையோ, உங்கள் முடிவுக்கு ஏற்றபடி ஃபண்டுகளின் தேர்வு என்பது மாறும். எனவே, எஸ்.ஐ.பி. முதலீட்டிற்கு ஏற்ற ஃபண்டுகள் எவை? அதேபோல, மொத்தமாக முதலீடு செய்வதற்கு ஏற்ற ஃபண்டுகள் என்னென்ன? என்பதை இனி பார்ப்போம். அதை வைத்து முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு முறையைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

மொத்த முதலீடு (Lumpsum Invesment)!

மொத்தமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், அந்த முதலீட்டை எவ்வளவு நாள் தொடரப்போகிறோம் என்பதுதான். உதாரணமாக, ஒருவர் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கப்போவதில்லை எனில், சந்தை இன்றுள்ள நிலையைப் பார்க்கவேண்டும்.



கடந்த ஐந்து ஆண்டுகளாக சந்தை எந்த ஏற்றத்தையும் சந்திக்கவில்லை. ஆனால், இப்போதிருக்கும் நிலையிலிருந்து கீழே இறங்குவதற்கும் வாய்ப்புகள் குறைவே. அப்படி இறங்கினால் ஒருவேளை 15 சதவிகிதம் வரை இறங்கலாம். அதேசமயம், மேலே ஏறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்போது ஒருவர் இன்னும் ஐந்து ஆண்டு வரை காத்திருப்பார் என்றால் இதைவிட ஒரு பொன்னான வாய்ப்பு மீண்டும் கிடைப்பது அரிது.

ஒருவேளை சந்தை அதிக ஏற்றத்துடன் இருந்தால் (உதாரணமாக, ஜனவரி 2008) மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.டி.பி. (Systematic Transfer Plan)என்ற முறையைக் கையாண்டிருக்கவேண்டும். இந்த முறையில் நம்முடைய சிங்கிள் இன்வெஸ்ட்மென்ட் தொகை கடன் சார்ந்த திட்டங்களில் வைக்கப்பட்டு வாராவாரம் டார்கெட் ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றப்படும். இந்த முறை சந்தை செல்லும் திசை நமக்கு சரியாகத் தெரியாதபோது அதிக பயன்தருவதாக இருக்கும். மூன்று முதல் ஒன்பது மாதம் வரை இத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். ஒன்பது மாதத்திற்கு பிறகும் சந்தை செல்லும் திசை தெரியவில்லை என்றால் மீண்டும் தொடரலாம்.  

எஸ்.ஐ.பி. முதலீடு! (SIP investment)

எப்போது வேண்டுமானாலும் இந்த முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பிக்கலாம். ஏனெனில், முதலீடு என்பது பல கட்டத்தில் செய்யப்படுகிறது. பலமுறை முதலீட்டை செய்யும்போது சராசரியாக நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. சந்தைக்கேற்றபடி ஏற்ற இறக்கங்களில் வாங்குவதால் சராசரி வருமானம் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டு அடிப்படையில் 15 சதவிகிதம் ஆண்டு கூட்டு வளர்ச்சி (CAGR) எஸ்.ஐ.பி. முதலீட்டில் கிடைத்துள்ளது. ஆனால், மொத்த முதலீட்டு முறையில் 25 சதவிகிதம் ஆண்டு கூட்டு வளர்ச்சி கிடைத்துள்ளது. இது குறைந்த அளவே.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்தை 3 சதவிகிதம் ஆண்டு கூட்டு வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், எஸ்.ஐ.பி. முதலீட்டு முறையில் 10 முதல் 15 சதவிகிதம் வரை வருமானம் கிடைத்துள்ளது. சந்தை 3 சதவிகிதம்  ஏறும்போது 10 சதவிகிதம் கிடைத்தால், வரும் காலங்களில் சந்தை 8 சதவிகிதம் உயரும்போது 15 சதவிகித லாபம் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.

எஸ்.ஐ.பி. முதலீட்டு முறையில் பலருக்கும் உள்ள சந்தேகம், எந்த குறிப்பிட்ட தேதியை முதலீட்டிற்கு தேர்வு செய்வது என்பது. எஸ்.ஐ.பி. முறையைத் தேர்வு செய்வது முதலீட்டாளர்களின் வசதியைப் பொறுத்தது. அதேசமயம், மற்ற தேதிகளைவிட 5 முதல் 10 வரை உள்ள தேதிகளின் முதலீடுகள் 0.5 சதவிகிதம் அதிக  வருமானம் கொடுத்துள்ளது.

வருமான அட்டவணை!

மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஃபண்ட் பெர்ஃபார்மன்ஸ் காட்டப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 2,000 ரூபாயும் (2,000ஜ்120 மாதங்கள் = ரூ.2,40,000), மொத்தமாக 2.40 லட்சம் ரூபாயையும் 28.5.03 முதல் 27.5.13 வரையில் முதலீடு செய்திருந்தால் கிடைக்கும்  வருமானம் எஸ்.ஐ.பி. முறையைவிட மொத்த முதலீட்டில் அதிகம். காரணம், சந்தையின் போக்கு முதலீடு செய்யும்போது குறைவாக இருந்து பின்னர் அதிக ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. இந்த முதலீட்டு விவரத்தை  நன்றாக கவனித்தால், மொத்தமாக முதலீடு செய்யும் முறையில் நல்ல பலன் தந்துள்ளது தெரியும்.

எதற்கு என்ன ஃபண்ட்?

ஒருவருடைய முதலீட்டின் தேவைக்கேற்ப ஃபண்டுகளைத் தேர்வு செய்யவேண்டும். தேர்வு செய்தபின்பு நீண்டகால அடிப்படையில் காத்திருப்பது அவசியம். எஸ்.ஐ.பி. மற்றும் மொத்த முதலீடு என இரண்டுக்கும் பொதுவானதாக ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி, ஐ.டி.எஃப்.சி. ஸ்டெர்லிங் ஈக்விட்டி, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டிஸ்கவரி, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப், யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

எஸ்.ஐ.பி. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்காக மட்டும் என்றால் எஸ்.பி.ஐ. எமெர்ஜிங் பிசினஸ், ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டிஸ்கவரி, ஐ.டி.எஃப்.சி. ஸ்டெர்லிங், ஐ.டி.எஃப்.சி. பிரீமியர், மிரே அசெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். மொத்தமாக முதலீடு செய்யும்போது சந்தையின் போக்கு குறைவானதாக இருந்து பின்னர் அதிகரித்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.



சென்செக்ஸ் புள்ளிகள் அதிகமாக இருக்கும்போது, ஒருவர் மொத்தமாக முதலீடு செய்து, அதை குறுகியகால அடிப்படையில் எடுப்பதாக இருந்தால் நிச்சயமாக நஷ்டம் ஏற்படும். அதனால் மொத்தமாக முதலீடு செய்யும்போது சந்தையின் எதிர்கால போக்கினை கணக்கில்கொண்டு முடிவு எடுப்பது நல்லது.  

இதே சந்தையின் போக்கைப் பார்த்து எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் முதலீடு செய்தால், இறங்கும் சந்தையில் நஷ்டம் குறைவாக இருக்கும். மேலும் சந்தையைக் கணிக்க முடியாதவர்களுக்கு எஸ்.ஐ.பி. முறை சிறந்தது.
முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ஒரு தொகை கிடைக்கிறது என்கிறபட்சத்தில் அன்றைய சந்தை நிலவரத்தையும் எதிர்காலத்தில் சந்தையின் அனுமானத்தைக் கணக்கிட்டும் சிங்கிள் இன்வெஸ்ட்மென்ட் முறையில் மொத்தமாக முதலீடு செய்வதில் தவறு இல்லை.