Saturday, 23 November 2013
Monday, 18 November 2013
What Do You Expect From Your Investments? - My 8th Article on Tamil Hindu dated on 18th November 2013
உங்களின் தேவைக்கு ஏற்ற
முதலீடு எது? - பி.பத்மநாபன்

இன்று
எல்லோருக்கும் பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதைப் பற்றித்
தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய எண்ணம் இல்லை. தங்களுடைய பணத்திற்குத் தாம்
பொறுப்பெடுத்து கொள்ளாமல் அடுத்தவரை பழி சொல்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
முதலீட்டைப்
பற்றி அறிந்து கொள்வது மிக மிக எளிது. ஆனால் கண்டிப்பாக அதற்கு கொஞ்சம் ஆர்வமும்
வேண்டும். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டமான விஷய ங்களை பிடித்தோ பிடிக்காமலோ
கற்றுக்கொள்கிறோம். ஆனால் நமக்குப் பெரிதும் உதவக் கூடிய நாம் ஈட்டிய பொருளை
முதலீடு செய்வதில் மட்டும் ஏனோ ஓர் அலட்சியம் பெரும்பாலோருக்கு இருக்கிறது.
ரியல்
எஸ்டேட் முதலீடு இன்று பல மடங்காக அதிகரித்திருக்கிறது, சில பங்குகள் மற்றும்
அல்லது மியூச்சுவல் பண்டு முதலீடுகளும் நல்ல வருமானத்தை கொடுத்திருக்கிறது. ஆனால்
பலர் இந்த முதலீடுகளை பற்றி மறந்துவிட்டார்கள்அல்லது அதனுடைய வளர்ச்சியை
பார்க்காமலோ, கணிக்காமலோ விட்டுவிட்டார்கள்.
இன்று
நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடிச் செல்ல வேண்டி இருக்கிறது.
அதற்கு நமக்குப் பலவிதமான வாகனங்கள் தேவைப்படுகிறது.
இந்த
வாகனங்கள், தூரம் மற்றும் அதற்கு ஆகக்கூடிய செலவுகளை பொறுத்தே பெரும்பாலும்
தேர்ந்தெடு க்கப்படுகின்றன.
உதாரணமாக
நடக்கும் தொலைவில் இருந்தால் நடப்பது அல்லது சைக்கிளில் செல்வது. இதுவே 5 முதல் 10
கிமீ என்றால் இரு சக்கர வாகனம்/ஆட்டோ/ கார்/ மற்றும் பேருந்தை பெரும்பாலும்
உபயோகப்படுத்துகிறோம். இந்த தூரம் அதிகரிக்கும் போது நாம் ரயில் மற்றும்
விமானத்தைத் தேர்வு செய்கிறோம்.
நாம்
வெளிநாட்டிற்கு செல்வதற்கு சைக்கிளோ அல்லது காரிலோ செல்ல முடியாது. அதே போல
பக்கத்துக்கு தெருவில் உள்ள மார்க்கெட்டிற்கு விமானத்தைத் தேர்வு செய்ய முடியாது.
இதே
போன்று நம்முடைய வாழ்க்கையில் பல இலக்குகள் (குழந்தையின் கல்வி, திருமணம்,
வெளிநாட்டு பயணம், தொழில் தொடங்குதல், ஓய்வு கால திட்டம்) நாம் ஈட்டக்கூடிய
பொருளைச் சார்ந்து உள்ளது.
அது
குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளைப் பொருத்தது. அதற்கு வங்கி டெபாசிட், போஸ்ட்
ஆபீஸ் டெபாசிட், தொடர் சேமிப்பு(ஆர்.டி.), மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை
முதலீடு, தங்கம், ரியல் எஸ்டேட் முதலியவை. இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு
கிடையாது. நம்முடைய ரிஸ்க்கை குறைப்பதற்கான வழிதான் இன்ஷூரன்ஸ்.
இதில்
முறைபடுத்தாதது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு. இன்று நிறைய பேருக்கு
பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரு சூதாட்டம் அதில் நாம் பணத்தை இழந்து விடுவோம்
என்ற நினைப்பு உள்ளது. அது மிகப்பெரிய தவறான கருத்தாகும். அதைப்பற்றி சிறிது
பார்ப்போம்.
அன்றாட
வாழ்வில் நமக்கு பல பிசினஸ் லாபகரமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மேலும்
சில பிசினஸ் நாம் பார்க்கும் போதே பல மடங்கு பெரிதாகிறது. நாமும் அதைத் தொடங்க
வேண்டுமானால் நமக்கு பணம் மற்றும் அதைப் பற்றிய நீக்கு போக்கு தெரிய வேண்டும்.
அதோடு நம்முடைய நேரத்தையும் அதற்காக ஒதுக்கவேண்டும். எந்த ஒரு பிசினசிலும்
எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. பங்குச்சந்தை முதலீடு என்பதும் நாம் ஒரு பிசினஸ்
வாங்குவது போன்றதுதான்.
எப்படி
நாம் ஒரு பிசினஸ் தொடங்குவதற்கு முன்பு அது நீண்ட கால அடிப்படையில் இருக்குமா எந்த
அளவிற்கு நாம் அதைப்பற்றி அன்றாடம் தெரிந்து கொள்ளவேண்டும் எனப் பார்க்கவேண்டும்.
மேலும்
நமக்கு பிடித்த பிசினசில் பார்ட்னாராக யாரும் நம்மை ஏற்று கொள்ளமாட்டார்கள்.
அப்படி நம்மை ஏற்று கொண்டால் அதற்கு நிறைய முதலீடு தேவைப்படும். ஆனால் அந்த
கம்பெனி பங்கை வாங்கும்போது ஒரு சில பங்காக இருந்தாலும் கூட நாம் பார்ட்னராக ஆக
முடியும்.
உதாரணமாக,
ஒவ்வொருவருக்கும் ஒரு சில வங்கியின் மீது நம்பிக்கை உள்ளது, அந்த வங்கி நமக்கு
இரண்டு வாய்ப்பைத் தருகிறது. ஒன்று உங்களிடம் பணம் கொடு அதற்கு ஒரு குறிப்பிட்ட
வட்டி தருகிறேன், மற்றொன்று என்னோடு பார்ட்னராக சேர்ந்து கொள், அதனுடைய பலனை
எற்றுக்கொள்.
ஆனால்
துரதிர்ஷ்டவசமாக பலர் வட்டிக்காக மட்டுமே வங்கியிடம் பணத்தை கொடுக்கிறோம், அதில்
ஒரு சில சதவிகிதத்தை ஒதுக்கினால் அந்த வங்கி பல கிளைகளை திறந்து விரிந்து
பெரியதாகும் பொழுது நாமும் அதனுடன் சேர்ந்து பெரிதாக பணம் பண்ண முடியும்.
கடந்த
10 முதல் 11 வருடங்களில், பல வங்கியின் பங்குகள் 20 முதல் 45 மடங்கு வளர்ந்துள்ளது.
வட்டிக்கு விட்டிருந்தால் 10% கூட்டு வட்டியில், அதனுடைய மதிப்பு 11 வருடங்களில்
2.85 மடங்கே. அவரவர் எடுக்கும் ரிஸ்க்-கிற்குத் தகுந்தாற்போல் சிறிய அளவாவது
பங்குக்கென்று ஒதுக்கினால் நம்முடைய நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும் நமக்கும்
நல்ல பணம் கிடைக்கும்.
பிசினஸ்
ஆக இருக்கட்டும் அல்லது ஒரு பங்கை தேர்ந்தெடுப்பதாக இருக்கட்டும் அதற்கான ஹோம்
வொர்க்கை நிறைய பேர் செய்வதில்லை, அதனால் தோல்வி ஏற்படுகிறது. இது ஒரு வேலை
சூதாட்டமாக இருந்தால் எப்படி எல்லா நாட்டிலும் அதை ஒத்துக்கொள்வார்கள். மேலும் இது
'செபி' என்று சொல்லக்கூடிய பங்கு, நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்கு படுத்தும்
கட்டுபாட்டு அமைப்புக்குள் உள்ளது.
ஒரு
சில பங்குகளை வாங்கும் போது நமக்கு மிக அதிகமான ரிஸ்க் உள்ளது. எனவே முதன் முறையாக
பங்கு சந்தைக்குள் வருபவர்கள், மியூச்சுவல் பண்டு மூலம் வந்தால் ரிஸ்க் குறைகிறது.
ஏனெனில்
அதை ஒரு அனுபவம் வாய்ந்த ஃபண்ட் மேனெஜர் 50 முதல் 60 பங்குகளை நிர்வகிப்பதால்
ரிஸ்க் கணிசமாகக் குறைகிறது.
இதில்
உத்தரவாத வருமானம் கிடையாது என்பதால், பலர் இதை ’பொன்சி’ திட்டத்தோடு
ஒப்பிடுகிறார்கள், அது பெரிய தவறு. உதாரணமாக பங்கு சந்தை 34 ஆண்டுகளுக்கு முன்பாக
சென்செக்ஸ் குறியீடு எண் 100 என தொடங்கி இன்று 20,400 புள்ளியில் உள்ளது. அதாவது
கூட்டு வட்டியின் படி 16.93%!
ஒரு
பாதுகாப்பான முதலீடு 8% முதல் 10% கொடுக்கும்பொழுது, கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால்
அந்த முதலீடு 15% வருமானம் கிடைக்கும் சாத்தியமும் இருக்கிறது. ஆனால் ஓரிரு
வருடங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று யாராவது உறுதி தந்தால் நம்ப வேண்டாம்.
மற்றொரு
முக்கியமான விஷயம் லிக்விடிட்டி என்பது, அதாவது எவ்வளவு விரைவில் அந்த முதலீட்டை
பணமாக மாற்றுவது, அந்த வகையில் ரியல் எஸ்டேட் மிகவும் ரிஸ்க். மேற்சொன்ன மற்ற
இன்வெஸ்ட்மென்ட்டில் நாம் வேண்டிய போது பணத்தை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
நீண்ட
கால அடிப்படையில் மியூச்சுவல் பண்டு மற்றும் பங்குச் சந்தை முதலீடு லாபகரமாக
இருக்கும், ரிஸ்கும் குறைவு.
குறைந்த
கால அடிப்படையில் வங்கி டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட், தொடர் சேமிப்பு மற்றும்
தங்கம் ரிஸ்க் குறைவு.
ஆனால் நீண்ட காலம் வைத்திருக்கும்பொழுது பணவீக்கத்தை கட்டுபடுத்தாமால்
போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதைப் புரிந்து கொண்டு, உங்களின் தேவையையும்
கருத்தில் கொண்டு முதலீடு செய்தால் தேவைக்கு ஏற்ப நிறைய பணம் பண்ணலாம்.
Monday, 11 November 2013
Children's Education and Parents Investments? - My 7th Article in the Hindu Tamil Dated on 11th November 2013
குழந்தைகளின் கல்வியும்
பெற்றொர்களின் முதலீடும் - பி.பத்மநாபன்

ஒருவருக்கு
என்றும் அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றசெல்வம்
எல்லாம் உயர்ந்தது அல்ல என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னது. பலர் தம்
வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியைத் தனது குழந்தைகளின்
கல்விக்காக செலவிடுவதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.
இதை
புரிந்து கொண்டதால்தானோ என்னவோ இன்று கல்வி நல்ல வியாபாரமாகிவிட்டது.படிக்காத பலர்
இன்று பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள் அதில் பல படித்தவர்கள்
ஆசிரியர்களாக இருக்கிறார்கள்! கல்வியின் பேரில் என்ன சொன்னாலும்பெற்றோர்கள் பணத்தை
செலவிடுவதற்குத் தயங்குவது இல்லை.
ஒருவரின்
வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் கல்வியாக நம்பப்படுவது மருத்துவம் மற்றும்
பொறியியல் போன்ற தொழில் சார்ந்த துறைகளே. முந்தைய காலங்களில் கல்வி நிறுவனங்கள்
பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் சேவை நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்ததால், தரமான
கல்வி, சேவை நோக்குடன் வழங்கப்பட்டு வந்தது. மேலும்குறைவான கல்வி நிறுவனங்கள்
இருந்ததால் நிறைய திறமைசாலிகள் உருவானார்கள்.
இன்று
கல்வி வியாபாரமாகி விட்டபடியால் நிறைய பொறியியல் பட்டதாரிகள்இருக்கிறார்கள் ஆனால்
அவர்களுக்கு நடைமுறை பயிற்சி இல்லாததால் கஷ்டப்படுகிறார்கள்.
பாசமுள்ள
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த கல்வியே அளிக்க விரும்புவீர்கள்.
உங்கள் குழந்தையின் கல்வியின் கனவை நினைவாக்க மற்றும் பாதுகாப்பான அவர்களின்
எதிர்காலத்திற்கு பொருளாதாரத் திட்டமிடுதல் மிக மிகஅவசியமானது.
வாழ்க்கைத்
தரம் உயர்ந்து வருவதற்கேற்ப, உங்கள் குழந்தையின் கல்விக்கான செலவுகளும்
அதிகரிக்கிறது. முன்னதாகவே உங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்காக திட்டமிட அல்லது
சேமிக்க பெரும்பாலோர் செய்யும் ஒரு தவறான காரியம் குழந்தை பிறந்தவுடன் ஒரு
இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது தான். அவர்களை பொறுத்தவரை அந்தபணம் அவர்களது
குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு உதவும் என்பது தான். அது கொஞ்சம்கூட பத்தாது
என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தாத்தா,
பாட்டி பெரும்பாலும் தன்னுடைய பேரன் மற்றும் பேத்திக்கு எதாவது செய்யவேண்டும் என
விரும்பி இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள் அல்லது வைப்பு நிதியில் பணம்போடுவார்கள்.
நீண்ட
கால அடிப்படையில் அந்த பணம் தேவைப்படுவதால் அதை மியூச்சுவல் பண்டு திட்டங்களில்
சேமிப்பது நல்லது அல்லது நல்ல ஷேர் வாங்கினால் அது பிற்காலத்தில் கை கொடுக்கும்.
விலை குறைவாக கிடைக்கும் தருணத்தில் ஒருபிளாட்டை வாங்கினாலும் நல்லது.
முன்பு
4 அல்லது 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கூட பெற்றோர்கள் குழந்தைகளின்
படிப்பிற்காக நேரம் ஒதுக்கி தனிப்பட்ட கவனம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைய
பெற்றோர்கள் பொருள் ஈட்டுவதிலேயே கவனம் கொள்வதால் சரிவர குழந்தைகளின் படிப்பில்
கவனம் செலுத்தமுடிவதில்லை மேலும் இன்று 2 குழந்தைகள் தான்அதிகப்படியாக உள்ளது.
அதிக பொருள் ஈட்டுவதால் அதிக கல்விக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்க்கவேண்டும்
என்ற மனப்பான்மையும் உள்ளது. இதற்காக குழந்தைகள் ஒரு மணி நேரம் பிரயாணத்திலேயே
செலவிட நேரிடுகிறது.
குழந்தைகளின்
கல்விக்கு என சேமிக்கும்பொழுது இன்றைய கல்விக்கான செலவு என்ன அது 8% பணவீக்கத்தில்
எவ்வளவு பிற்காலத்தில் என்று கண்டு கொண்டால் நமக்குஅதற்கான தொகை தெரிந்து விடும்.
உதாரணமாக குழந்தைகளின் கல்வி நீண்ட காலஅடிப்படையில் இருப்பதால் நாம் இன்சூரன்சை
தவிர்ப்பது நல்லது. இன்று ஒரு குழந்தை பொறியியல் படிக்க குறைந்தது 6 லட்சம் 4
ஆண்டுகளில்தேவைப்படும். இதே படிப்பு இன்னும் 18 வருடத்தில் ஏறக்குறைய 24 லட்சம்
தேவைப்படும்.மாதம் 3 ஆயிரம் சேமித்தால் 18 வருடங்களில் அதை அடைந்து விட முடியும்.
அதற்கு நாம் இன்றிலிருந்தே பிளான் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
ஆனால்
இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்கவேபெரிதும்
விரும்புகிறார்கள். இன்று அதற்காக ஆகக் கூடிய செலவு குறைந்தது 25 லட்சம்
2வருடத்திற்கான தொகை. இந்த பணம் 8% பண வீக்கத்தில் இன்னும் 18 வருடங்களில் 1கோடி
ஆகும்!
குழந்தை
பிறந்தவுடன் 9 ஆயிரம் மாதா மாதம் சேமிக்க தொடங்கினால் அவர்கள் 18வருடத்தில் 15%
கூட்டு வட்டியில் ஒரு கோடியை எளிதாக அடைந்து விடலாம். நீங்கள்வெளிநாட்டில் படிக்க
வைக்க விரும்பினால் மட்டுமே. உள்ளுரில் படிப்பதற்கு 40 லட்சம் மட்டுமே தேவைப்படும்
அதற்கு மாதம் 4 ஆயிரம் சேமித்தால் போதுமானது.
இன்று
பெரும்பாலோர் ஓரிடத்தில் வேலை செய்வதால் ஒரே சமயத்தில் முதலீடு செய்யமுடியாது
ஆனால் எல்லோராலும் மாதா மாதம் ஒரு தொகையை சேமிக்கமுடியும். அந்தவகையில்
மியூச்சுவல் பண்டு பயனுள்ளதாக இருக்கிறது. SIP முறையில் ஒருவரால் எளிதாக சேமிக்க
முடிகிறது மேலும் நம்முடைய சம்பள உயர்விற்கேற்ப வருட வருடம் SIPதொகையை
அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
RULE 72
ஒரு
முதலீடு இரண்டு மடங்கு ஆகவேண்டும் என்றால் நமக்கு கிடைக்கும் வட்டியை 72ல்
வகுத்தால் கிடைக்க கூடிய எண் எத்தனை ஆண்டு என்பதை குறிக்கும் அதே போல வருடத்தை
72ல் வகுத்தால் கிடைக்க கூடியது வட்டி ஆகும்.
உதாரணமாக
ஒருவருக்கு 8% வட்டி கிடைத்தால் அவருடைய பணம் 9 ஆண்டுகளில்இரட்டிப்பாகும். 72/8=9
வருடம். அதே போல ஒருவருக்கு 6 வருடத்தில் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்றால்
அவருக்கு 12% வட்டி கிடைக்க வேண்டும். அதாவது 72/6=12% வட்டி.
நமது
பணவீக்கம் 8% என்று எடுத்துக்கொண்டால் ஒருவருக்கு குழந்தை பிறந்ததில் இருந்து18
வருடத்தில் என்றைய கல்வியின் மதிப்பு 4 மடங்கு ஆகி விடும்.
கல்விக்கான
முதலீட்டை தேர்ந்தேடுக்கும்பொழுது அந்த முதலீடு நம்முடைய இலக்கை அடைய உதவுமா,
அதில் என்ன ரிஸ்க், குறைந்த கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா முதலியவற்றை
பற்றி அறிந்து செயல் பட வேண்டும். அதை விடுத்து அந்த முகவர் சொன்னார் இவ்வளவு
கிடைக்கும் அவ்வளவு கிடைக்கும் என்று செய்தால் நாம் நம்முடைய குறிக்கோளை அடைய
முடியாது.
பி.பத்மநாபன்
- padhu73@gmail.com
Tuesday, 5 November 2013
Retirement Planning - My 6th Article in The Hindu dated on 5th November 2013
ஓய்வுக் கால திட்டமிடல்
- பி. பத்மநாபன்

இன்று
நம்மில் பலர் தனியார் நிறுவனங்களில் தான் வேலை செய்கிறோம். எனவே நமக்கு ஓய்வூதியம்
(பென்ஷன்) கிடையாது, அரசாங்க வேலையிலும் கூட 2004 எப்ரலுக்குப் பிறகு பணியில்
சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இன்று நாம் கூட்டுக் குடும்பங்களில்
இருந்து விலகி தனித் தனி தீவாகி விட்டோம். இதனால் தனி மனித செலவு என்பது நாளுக்கு
நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அரசாங்கத்தில்
ஒருவருடைய சம்பளத்தில் 10% மாதா மாதம் பிடித்து 30 முதல் 35 வருட முடிவின் பிறகு
கொடுக்கப்படக்கூடிய தொகையே பென்ஷன் ஆகும். 10 வருடங்களுக்கு முன்பு போதுமானதாக
இருந்தது காரணம் அனைவரும் தேவைக்கு ஏற்ப செலவு செய்தார்கள். ஆனால் தற்பொழுது
விருப்பம் மற்றும் மற்றவர் நம்மை பற்றி ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ என்று செலவு
செய்வதால் அந்த பணம் போதுமானதாக இருப்பதில்லை.
தனியார்
நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பென்ஷன் இல்லாததை சாபம் என்று நினைக்கிறார்கள்.
இதை அவர்கள் நினைத்தால் வரமாக மாற்ற முடியும். சாபமோ வரமோ அது நம்முடைய
அணுகுமுறையில் தான் இருக்கிறது.
இன்று
வேலைக்கு சேர்பவர்களின் சராசரி வருமானம் ரூபாய் 20,000. இதில் 10%, அதாவது மாதம்
2000 சேமிப்பதற்கு எடுத்துக்கொண்டால் இது 30 வருடங்களில் ஒரு கோடியே நாற்பது
லட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபாய், நாம் 15% கூட்டு வட்டி என எடுத்துக்கொண்டால்.
சென்செக்ஸ்
கடந்த 34 வருடங்களாக இருக்கிறது 1979-80ம் ஆண்டு 100 புள்ளியில் ஆரம்பித்தது என்று
21,164 புள்ளிகள் அதாவது 17% கூட்டு வட்டி. ஈக்விட்டி திட்டங்கள் நிறைய பலனை தான்
கொடுத்திருக்கின்றன.
ஈக்விட்டி
என்பது ஒரு பிசினஸ், அது பலன் தர 5 முதல் 10 ஆண்டு வரை கூட ஆகும் எனவே
பொறுத்திருப்பது நல்லது அதை விட்டு விட்டு அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தால்
நமக்கு மன அழுத்தம் தான் உண்டாகும். நிறைய பேர் இதை தவறாக புரிந்து கொண்டு இது ஒரு
சூதாட்டம் மேலும் நமக்கு நிறைய இழப்பு தான் வரும் என்று நினைக்கிறார்கள்.
ஈக்விட்டி
அனைத்து நாடுகளிலும் நல்ல பயனையே தந்திருக்கிறது நீண்ட கால அடிப்படையில். பண
வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு முதலீடாகும். ஒரு போதும் 2 ஆண்டில் பணம் இரு மடங்காகும்
என்று சொல்லவில்லை, அதே சமயம் 10 ஆண்டு கால அடிப்படையில் டைவர்சிபைட் பண்ட் நல்ல
பலனையே தந்திருக்கிறது.
மருத்துவத்தின்
வளர்ச்சியினால் இன்று 35 முதல் 40 வயது உள்ளவர்கள் 80 வயது வரை வாழ வாய்ப்புள்ளது.
அதே சமயம் பெரும்பாலோர் சீக்கிரமாகவே ஓய்வு பெற விரும்புகிறார்கள் 50 முதல் 55
வயதிற்குள்ளாகவே.
இதனால்
25 முதல் 30 வயது வரை ஓய்வு பெற்ற பின்பு எந்தவித சம்பாத்தியம் இல்லாமலோ அல்லது
குறைந்த சம்பாத்தியத்திலோ காலத்தை ஓட்டவேண்டும். இன்றே நிறைய முதியோர் இல்லங்கள்
வந்துவிட்டன. ஜெனரேஷன் இடைவெளி என்பது போக போக அதிகமாக வாய்ப்பு இருப்பதாலும்
நமக்காக ஒரு தொகை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது.
நிறைய
பேர் ரிடையர் ஆனவுடன் எல்லா பணத்தையும் பாதுகாப்பு கருதி பிக்ஸட் டெபாசிட் மற்றும்
போஸ்ட் ஆபீசிலும் முதலீடு செய்கிறார்கள். அவர்களுடைய எல்லா பணமும் உடனடியாக தேவைப்படாது.
அந்த மாதிரி உள்ள பணத்தை பேலன்சடு MF ல் போடுவது நல்லது. அது 6 ஆண்டுகளில் இரு
மடங்கு ஆவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தற்பொழுது உள்ள நிலைமை மிகவும் பிரகாசமாக
இருக்கிறது. அவ்வாறு செய்வதால் நம்மால் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதோடு கொஞ்சம்
வருங்கால சந்ததிக்கும் விட்டு செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
ஒரு
சினிமா பார்க்க மற்றும் ஒரு சுற்றுலா சென்று வர நாம் நிறைய பிளான் செய்கிறோம்,
ஆனால் நம்முடைய வாழ்க்கை என்று வரும்போது நாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று
தள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறோம். சம்பாதிப்பது எப்படி ஒருவருக்கு எவ்வளவு
முக்கியமோ அதே அளவுக்கு சம்பாதித்த பணத்தை சரியான வழியில் முதலீடு செய்வதும்
முக்கியமாகும்.
ரிடயர்மெண்டுக்கு
பிளான் செய்யும்போது அவரவர் ரிஸ்க்-குக்கு ஏற்ப 20:20:10:30:20 என பாங்க்:போஸ்ட்
ஆபீஸ்: சேவிங்க்ஸ்: பேலன்டு ஈக்விட்டி என பிரித்துக்கொள்ளலாம். ரிஸ்க்-குக்கு
தக்கவாறு இந்த சதவீதத்தை கூடவோ குறைத்தோ மாற்றிக்கொள்ளலாம்.
வேலைக்கு
சேர்ந்த உடனே ரிடயர்மென்ட் பிளான் செய்தால் முதலீடும் குறைவு, நல்ல தொகை கிடைப்பது
உறுதி. இன்றைய இளைஞர்கள் சம்பாத்தியம் - செலவு = சேமிப்பு என்று
பின்பற்றுகிறார்கள். இதில் ஒரு சின்ன திருத்தம் செய்தால் எல்லாம் சரியாகி விடும்.
அதாவது சம்பாத்தியம் - சேமிப்பு = செலவு என மாற்றினால் நம்முடைய ரிடயர்மென்ட்
வாழ்க்கை வாழ்வதேற்கே! இல்லாவிடில் அதை நினைத்து பயந்துகொண்டே இருக்கவேண்டும்.
நாம்
ஏன் பணமாகவே வைத்துக்கொள்ள வில்லை என்றால் அதற்கு மதிப்பு குறைவு எனவே ஒரு ரியல்
எஸ்டேட், ஈக்விட்டி, பாங்க் மற்றும் போஸ்ட் ஆபீஸ் முதலியவற்றில் முதலீடு
செய்கிறோம். அவ்வாறு செய்யும்போது நம்முடைய ரிஸ்க் என்ன அதனுடைய ரிடர்ன் என்ன
என்று இணைய தளத்தில் கொஞ்சம் அலசி, ஒரு முகவருக்கு இரண்டு பேரிடம் விசாரித்த
பின்பு முதலீடு செய்வது நல்லது. பிளான் செய்வதை பற்றி மிகவும் அற்புதமான ஒரு வரி
உண்டு. வெற்றிக்கு பிளான் செய்ய தவறுபவர்கள் எல்லோரும் தானாகவே தோல்விக்கு தயார்
செய்கிறார்கள் என்பதே. நல்ல வாழ்க்கைக்கு தயார் செய்வோம் நன்றாக வாழ்வோம்.
பி.பத்மநாபன்
- padhu73@gmail.com
Subscribe to:
Posts (Atom)