நான்கு பெண்கள், நாலுவித பட்ஜெட்...
செ.கார்த்திகேயன்,
கவர் ஸ்டோரி
நிதி நிர்வாகம் செய்வதில், அதிலும்
முக்கியமாக குடும்பத்துக்கான வரவு-செலவுகளைச் செய்வதில் நம் பெண்கள்
படுபுத்திசாலிகள். வருமானம் எவ்வளவாக இருந்தாலும், அதற்குள் குடும்பச்
செலவை சிக்கென முடிக்கும் திறமை அவர்களுக்கு நிறையவே உண்டு. செலவைக்
குறைப்பதோடு, சிறுவாடு மாதிரி சின்னச் சின்னதாக பணம் சேர்த்து, வீட்டுச்
செலவுக்கு திடீரென பணம் தேவைப்படும்போது தந்துஉதவி ஆச்சரியப்பட வைக்கும்
பெண்களை பல வீடுகளில் பார்க்க முடியும்.
என்றாலும், இன்றைக்கு வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது.
வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கைப் பெருகிவிட்டது. வருமானம்
உயர்ந்திருப்பதால், செலவு செய்யும் மனப்பாங்கும் அதிகரித்திருக்கிறது.
இன்றைக்கு பல வீடுகளில் பெண்கள் எப்படி பட்ஜெட் போடுகிறார்கள்?, எந்த
மாதிரியான விஷயங்களுக்கு அவர்கள் முன்னுரிமை தருகிறார்கள்?, அவர்கள்
செய்வதில் எது சரி?, எந்தெந்த விஷயங்களை இன்னும் சரியாகச் செய்யலாம் என்பதை
ஆராய தமிழகத்தின் பல நகரங்களில் இருக்கும் குடும்பத் தலைவிகளிடம்
அவர்களின் ஃபேமிலி பட்ஜெட்டைக் கேட்டோம். ஒளிவுமறைவு இல்லாமல் தங்கள்
பட்ஜெட்களை நம்மிடம் எடுத்துக் கொடுத்தார்கள்.
அப்படி கிடைத்த பட்ஜெட்களில் நான்கு பட்ஜெட்களை மட்டும்
தேர்வு செய்து, அதை நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் தந்தோம். இந்த
பட்ஜெட்களில் உள்ள நிறை - குறைகளை ஆராய்ந்த அவர், குறைகளைக் களையும் வழிகளை
எடுத்துச் சொன்னார். குடும்ப பட்ஜெட் போடும்போது கவனிக்கவேண்டிய சில
பொதுவான விஷயங்களை அவர் முதலில் சொன்னார்.
''ஒவ்வொரு குடும்பமும் முதலில் ஒட்டுமொத்த
குடும்பத்துக்கு ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியையும், குடும்பத் தலைவர்
பேரில் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் கட்டாயம் எடுத்தாகவேண்டும்.
இதற்கான பணத்தை மாதா மாதம் ஒதுக்கி வைத்துவிடுவது நல்லது.
அடுத்து,
வேலை இழப்பு அல்லது எதிர்பாராத திடீர் செலவு போன்றவற்றை சமாளிக்க
'எமர்ஜென்ஸி மணி’ கட்டாயம் இருக்கவேண்டும். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்
முதல் 1 லட்சம் ரூபாய் வரை, அல்லது ஆறு மாத காலத்துக்கு குடும்பம்
நிம்மதியாக நடக்கத் தேவையான பணத்தைச் சேர்க்க மாதா மாதம் கொஞ்சம்
ஒதுக்கிவிடுவது அவசியம்.
இதற்கடுத்து, உங்கள் எதிர்காலத் தேவைகளை சரியாக
கணித்து, அதற்கான முதலீட்டை இப்போதே தொடங்குவது நல்லது. சொந்த வீடு,
குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம், ஓய்வுக்காலத்துக்கு தேவையான
பணத்தைச் சேர்ப்பது உள்பட உங்களது எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
சரியான வழிகளில் முதலீடு செய்யவேண்டும்.
குடும்பச் செலவை சரியாகச் செய்யும் நம் பெண்கள்,
முதலீடு என்று வரும்போது ரிஸ்க் மிகுந்த வழிகளைத் தேர்வு செய்து
விடுகிறார்கள். உதாரணமாக, அரசிடம் பதிவு செய்யப்படாத அமைப்புகளில் சீட்டு
சேருவது. சரியான முதலீட்டு வழிகள் இருக்க, ரிஸ்க் மிகுந்த வழிகளைத் தேர்வு
செய்வானேன்?
இந்த பட்ஜெட்களை ஆராய்ந்து குடும்ப நிதி
நிர்வாகத்திற்கு மார்க் கிரேடு தந்திருக்கிறேன். இந்த மார்க்கை எந்த
அடிப்படையில் தந்திருக்கிறேன் என்பதை மேலே உள்ள அட்டவணையில் சொல்லி
இருக்கிறேன்'' என்றபடி, வாசகர்களின் பட்ஜெட்களுக்குள் நுழைந்தார்.
No comments:
Post a Comment